இந்திய எல்லைக்குள் நுழைந்தால் இதுதான் கதி..!! அத்துமீறி நுழைந்தவனின் உடலை சல்லடையாக்கிய இந்திய பாதுகாப்பு படை.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2020, 12:12 PM IST
Highlights

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே  நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாத அமைப்பின் தளபதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதன் மூலம் இந்தியாவின் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி குழப்பத்தை ஏற்படுத்த பகிரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவமும் அத்துமீறி தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் துணையுடன் அடிக்கடி எல்லையில் ஊடுருவ முயன்று இந்திய பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி தோட்டாக்களுக்கு  பயங்கரவாதிகள் இரையாகி வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள ரங்ரித்  என்ற பகுதியில் சில பயங்கரவாதிகள் குழுவாக பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து  அப்பகுதியை நேற்று மாலை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இச்சண்டையில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார் மற்றும் ஒருவர் சரணடைந்தார் இதனையடுத்து அந்த சண்டை முடிவுக்கு வந்தது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காஷ்மீர் மாநில ஐஜி விஜயகுமார், இந்த என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைமை தளபதி ஷைப்புல்லா மீர்  கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஹிஸ்புல் முஜாகிதீன் முன்னாள் தளபதியான ரியாஸ் நைகோ கடந்த மே மாதம் என்கவுண்டரில் கொல்லப்பட்டதை அடுத்து அந்த அமைப்பின் தலைமை தளபதி பொறுப்பை ஷைப்புல்லா மீர் ஏற்று நடத்தி வந்தார். இந்நிலையில் அவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட மற்றொரு பயங்கரவாதியிடம் சதி திட்டங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

 

click me!