DMK விடியல் அரசு அல்ல... இது வீடியோ அரசு... திமுக அரசை கடுமையாக விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

Published : Dec 10, 2021, 06:30 PM IST
DMK விடியல் அரசு அல்ல... இது வீடியோ அரசு... திமுக அரசை கடுமையாக விமர்சித்த டாக்டர் கிருஷ்ணசாமி..!

சுருக்கம்

விடியல் தரும் என்று சொன்னார்கள். விடியாவிட்டாலும் பரவாயில்லை, இப்போது வீடியோ அரசாக தான் இருக்கிறது.

கடந்த ஆட்சியில் சாத்தான்குளம் சம்பவத்திற்கு காவல்துறை அராஜகம், சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டில் இல்லை என்று பொங்கிய திமுக, ராமநாதபுரம் மணிகண்டன் மரணத்திற்கு அமைதியாக இருப்பது ஏன்? என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 7 மாவட்டங்களுக்கான புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.

’’ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்கள் தான் ஆகிறது. இரண்டு வருடம் முழுமையாக முடிந்த பின்னரே ஆட்சியின் நிர்வாகத் திறமை பற்றி தெரியவரும். ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் திமுக பல வாக்குறுதிகளை அள்ளி வீசியது. பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்குவதாக அறிவித்த திமுக அதைப்பற்றி தற்போது வாய் திறக்க மறுக்கிறது. 

இந்திய மாநிலங்களிலேயே பெட்ரோலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவர வேண்டும் என கூக்குரலிட்ட திமுக தற்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சாத்தான்குளம் ஜெயராஜ் மரணத்தில் சட்டம் கட்டுப்பாட்டில் இல்லை. காவல்துறை அராஜகம் என பேசிய திமுக தற்போது மாணவர் மணிகண்டன் சந்தேகத்துக்குரிய மரணத்தில் கருத்துச் சொல்ல மறுக்கிறது. இதுபோன்று தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஒரு காவலரை 10 வயது சிறுவன் கொன்று விட்டார் என காதில் பூ சுற்றுகிறார்கள்.

அந்த வழக்கு விசாரணை செய்யாமல் பூசி மெழுகி மூடி மறைத்து விட்டார்கள். எனவே இந்த திமுக அரசு பெரிய சாதனை செய்ததாக எந்த இடத்திலும் சொல்ல முடியாது. வெளியில் அரசாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்த அரசு வீடியோ அரசாக இருக்கிறது. திரும்பும் வீடியோ மட்டும் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. செயல்பாடுகள் எதுவும் வெற்றிகரமாக இல்லை’’ என குற்றம் சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி