டாஸ்மாக்கை திறக்க உண்மையான காரணம் இதுதான்..?? புற்றீசல் போல முளைத்த கள்ளச்சாராயம்.

By Ezhilarasan BabuFirst Published Jun 12, 2021, 5:43 PM IST
Highlights

இந்த சோதனையில் நேற்று மட்டும் தமிழக மாவட்டங்களில் சோதனை மேற்கொண்டபோது கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 4,800 லிட்டரும், வேலூர் மாவட்டத்தில் 3,000 லிட்டரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,200 லிட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5,400 லிட்டரும்,  

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழக மாவட்டங்களில் நேற்று மட்டும் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட 20,307 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 4,293 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு வேட்டை "Operation Wind' என்று பெயரிடப்பட்டு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின் பேரில் 08.06.2021முதல் 15 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் சாராயம் மற்றும் சாராய ஊறல் அழிப்பதற்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த சோதனையில் நேற்று மட்டும் தமிழக மாவட்டங்களில் சோதனை மேற்கொண்டபோது கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 4,800 லிட்டரும், வேலூர் மாவட்டத்தில் 3,000 லிட்டரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,200 லிட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 5,400 லிட்டரும், நாமக்கல் மாவட்டத்தில் 1,225 லிட்டரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,320 லிட்டரும் மற்றும் சில இடங்களிலும் ஆக மொத்தம் சாராய ஊரல் 20,307 லிட்டர்கள் மற்றும் 4,293 லிட்டர்கள் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

மேலும் 1,093 டாஸ்மாக் பாட்டில்களும், 14,687 வெளிமாநில மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு 651 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 122 வாகனங்களும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக அரசு டாஸ்மாக்கை மூடிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தலை தூக்க தொடங்கியுள்ளது. இதனால்தான் டாஸ்மாக்கை திறக்க அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

click me!