பேரவையில் மீண்டும் ஒலித்த ஜெ., வாய்ஸ் இதுதான்...! பூரிப்பில் அதிமுக தொண்டர்கள்...!

Asianet News Tamil  
Published : Feb 12, 2018, 11:33 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
பேரவையில் மீண்டும் ஒலித்த ஜெ., வாய்ஸ் இதுதான்...! பூரிப்பில் அதிமுக தொண்டர்கள்...!

சுருக்கம்

This is the jayalalithaa voice sounded again in the assembly

சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் ஜெயலலிதாவின் வாய்ஸ் ஒலிபரப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசிய வாக்கியங்கள் ஒலிபரப்பப்பட்டன. 

சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு நினைவு பரிசு வழங்கினர். 

ஜெயலலிதாவின் 7 அடி உயரம், 5 அடி அகலம் கொண்ட முழு உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் உருவப்படத்தின் கீழே அமைதி, வளம், வளர்ச்சி என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

அதிமுகவினரின் இத்தகைய செயலுக்கு எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு தெரிவித்து புறக்கணிப்பு செய்தனர். பேரவையில் எதிர்க்கட்சியினர் இருக்கைகளில் அதிமுக எம்.பி.,க்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்பட திறப்பு விழாவில் ஜெயலலிதாவின் வாய்ஸ் ஒலிபரப்பட்டது. அதில் ஜெயலலிதா பேசிய வாக்கியங்கள் ஒலிபரப்பப்பட்டன. 

ஜெயலலிதா பேசிய மக்களால் நான்; மக்களுக்காக நான், நான் இருக்கும்வரையிலும் நான் மறைந்தாலும் மக்களுக்காக இந்த இயக்கம் இயங்கிக்கொண்டே இருக்கும்  போன்ற வாசகங்கல் ஒலிபரப்பப்பட்டன. 

சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திரைப்படத்தை அடுத்து தலைமைச் செயலகத்திற்கு வெளியே அதிமுக தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடியை கவிழ்க்க ஓபிஎஸ்... ஸ்டாலின் அதிரடி வியூகம்..! தென்மாவட்டங்களில் செக்..!
உன் அழகில் மயங்கியே உன் கணவருக்கு வேலை கொடுத்தேன்..! அதிகாரியின் மனைவி மீது ஆசைப்பட்ட டிரம்ப் வீடியோ.!