இது ஆத்திகர் நாத்திகர் என எல்லாருக்குமான அரசுங்க.. அட்வைஸ் செய்த கி. வீரமணியை அசால்ட் செய்த சேகர் பாபு.

By Ezhilarasan Babu  |  First Published May 12, 2022, 1:17 PM IST

இது ஆத்திகர் நாத்திகர் என அனைவருக்குமான அரசு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தர்மபுர அதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், சிலரை திருப்பதி படுத்த வேண்டுமென இந்த அரசு செயல்படுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி விமர்சித்துள்ள நிலையில் சேகர்பாபு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.


இது ஆத்திகர் நாத்திகர் என அனைவருக்குமான அரசு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தர்மபுர அதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அரசு அனுமதி அளித்த நிலையில், சிலரை திருப்பதி படுத்த வேண்டுமென இந்த அரசு செயல்படுகிறது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி விமர்சித்துள்ள நிலையில் சேகர்பாபு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. நிர்வாக ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எடுத்துவரும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்று வருகிறது. அந்த வரிசையில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் அது விவாதப் பொருளாக மாறியது.

Tap to resize

Latest Videos

பின்னர் ஆதினங்கள் இந்து அமைப்புகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தருமபுர ஆதின பட்டின பிரவேசத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அரசின் இந்த அனுமதியை திராவிட கழகத் தலைவர் வீரமணி கடுமையாக விமர்சித்திருந்தார். சிலரை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக இந்த அரசு எடுக்கும் முடிவுகள் ஒருகட்டத்தில் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்காக வாய்ப்பாக அமைந்துவிடும் எனக் கூறியிருந்தா. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இது அனைவருக்குமான அரசு என தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்திபுத்தி விநாயகர் கோயில் மற்றும் பெரியபாளையத்து அம்மன் கோயில்கள் திருப் பணிகள் மேற்கொள்வது குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டார். சட்டமன்ற உறுப்பினர்  மருத்துவர் எழிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு கோயில்களை புனரமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள துணை ஆணையர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் நேரடியாக சென்று விசாரணை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் ஆய்வு செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். அனுமதி மருத்துவர்களுக்கு எதிராக சட்ட பூர்வமாக படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த மாத இறுதிக்குள் சிதம்பரம் நடராஜர்  கோயிலில் ஆணையர் உடன் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளோம் எனக் கூறினார். பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு பயத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கவில்லை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்வு என்பதால் ஆதினங்கள் கோரிக்கைக்கு ஏற்ப அனுமதி வழங்கப்பட்டது என விளக்கம் அளித்தார்.

எதிர்காலத்தில் பட்டின பிரவேசம் போன்ற நிகழ்வுகளுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்றார். தருமபுர ஆதின பட்டினப்பிரவேசம் அதற்கு அனுமதி அளித்து அதன் மூலம் இந்து அமைப்புகள் அரசுக்கு எதிராக செயல்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு. கி.வீரமணி அவரது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார், ஆத்திகர்- நாத்திகர் என அனைவருக்குமான அரசாக தமிழக அரசு உள்ளது என்றார். 
 

click me!