அரசு நிர்வாக தோல்விக்கு இதுவே உதாரணம்! விருதுக்கு என் வாழ்த்துக்கள்!: யார், யார் சொன்னது..

 
Published : Jan 29, 2018, 03:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:53 AM IST
அரசு நிர்வாக தோல்விக்கு இதுவே உதாரணம்! விருதுக்கு என் வாழ்த்துக்கள்!: யார், யார் சொன்னது..

சுருக்கம்

This is the example of a state administrative failure

பொறி பறக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடுவில் ‘ஏஸியாநெட் இணைய தள’ வாசகர்களுக்காக செம்ம ஸ்பீடு  மைக்ரோ பேட்டிகள்...

*    அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளான, சமத்துவம் உள்ளிட்டவற்றுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நாம் அடைத்துள்ள சமத்துவம்,

சகோதரத்துவம் போன்றவற்றில் பின்னோக்கி பயணித்துவிட கூடாது.
-    சீதாராம் யெச்சூரி

*    காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைமையானது மாநில அளவிலும், மத்திய அளவிலும் எல்லோரையும் அரவணைத்து செல்வதாக உள்ளது.
-    சரத்பவார்

*    என் சுற்றுப்பயணத்தில் ஒரு கிராமத்தை தத்தெடுக்க உள்ளோ. அதில் அரசு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தருவோம்.
-    கமல்ஹாசன்

*    பஸ் கட்டண உயர்வு விஷயத்தில் மாணவர்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். தமிழத்தை பொறுத்தவரை இளைஞர்களும், மாணவர்களும் போராடினால்தான் நீதி கிடைக்கும்.
-    அன்புமணி

*    அரசு விழாவில் ‘தினகரன் மாமியார் வீட்டுக்கு போவார்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.
-    செந்தில் பாலாஜி

*    என் அத்தையின் பெயர், புகழை நான் அடைந்துவிடக்கூடாது என்பதில் சசிகலா தரப்பு மிக உறுதியாக இருக்கிறது
-    ஜெ. தீபா

*    நீண்ட காலம் சும்மா இருந்துவிட்டு சில ஹீரோக்கள் இப்போதுதான் அரசியலுக்கு கிளம்பி வருகின்றனர். எனக்கென்னவோ மீடியாக்கள்தான் இவர்களை பெரிதுபடுத்திக் காட்டுகின்றனர்.
-    பாக்யராஜ்

*    ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க.வின் ஆட்சி அதிகமாக ஆட்டம் கண்டுவிட்டது. இதை சரி செய்து கொள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாக்களின் மூலம் முயன்றனர்.
-    ஹண்டே.

*    சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் ஜனாதிபதி ஆட்சியை அமல்ப்படுத்துங்கள். பொது மக்கள் மற்றும் பொது சொத்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாத நிலையில் சமாதானத்திற்கு இடமில்லை. நிர்வாகத்திறமையின் தோல்விக்கு இதைவிட ஒரு காரணம் சொல்லிவிட முடியாது.
-    அர்விந்த் சாமி

*    இசையுலகின் தலை சிறந்த இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்.
-    எடப்பாடி பழனிச்சாமி.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!