விடுதலை சிறுத்தைகள் கட்சியை கலைத்துவிட்டு திருமா சேர்ந்த சங்கம் இதுதான்....

By Vishnu PriyaFirst Published Apr 27, 2019, 7:07 PM IST
Highlights

*    மே 23-க்கு மறுநாள் தமிழகத்தில் ஆட்சி கவிழும், ஸ்டாலின் முதல்வர் ஆவார்: பொன்முடி
 

*    மே 23-க்கு மறுநாள் தமிழகத்தில் ஆட்சி கவிழும், ஸ்டாலின் முதல்வர் ஆவார்: பொன்முடி
(இதையெல்லாம் நீங்க ஏன் பேசுறீங்க பாஸ். இது ஆக்சுவலா உஙக் தலைவரோட டயலாக்காச்சே.  ஒருவேளை, ரெண்டு வருஷமா சொல்லிச் சொல்லி போரடிச்சுடுச்சுன்னு உங்களை சொல்லச் சொன்னாரோ?)

*    வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளர் பிரியங்கா போட்டியிடாதது ஏமாற்றம் அளிக்கிறது: அருண் ஜெட்லி. 
(ஆஹா கூட்டத்துல இருந்த அந்த பிளாக் ஷீப் தலை நீட்டிடுச்சு பார்த்தீங்களா நமோ? பிரியங்கா உங்களை எதிர்த்து நின்னா, லேடி அலையில நீங்க காணாமப் போயிடுவீங்கன்னு உங்க அமைச்சரவையிலேயே ஒரு டீம் எதிர்பார்த்து, இப்போ பல்பு வாங்கியிருக்குது.)

*    தூத்துக்குடி அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்களுக்காக தொழிற்சாலைகள் ஏற்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி வழங்க வேண்டும் என்பதே என் ஆசை: தமிழிசை.
(ஏன்? மிச்சம் இருக்குற பயபுள்ளைகளையும் போட்டுத்தள்ளவா?ன்னு அந்த ஊர்க்காரங்களே கேக்குறாங்க க்கா. தூத்துக்குடி மண்ணுல நின்னு தொழிற்சாலை துவங்குறதைப் பத்தி நாமெல்லாம் பேசலாமா? சூதானமா இருந்துக்க பழகுங்கக்கா)

*    ஒரு ஜாதி இன்னொரு ஜாதியை அச்சுறுத்துவது நிலையானது அல்ல. ஒருவனை அச்சுறுத்துவதற்கான வலியை, உனக்கு இப்போது இருக்கிறதென்றால், உன்னை அச்சுறுத்தும் வலிமை அவனுக்கு ஒரு நாள் வரும்: திருமாவளவன். 
(தல நீங்க எப்போ வி.சி.க.வை கலைச்சுட்டு, சமரச சன்மார்க்க சங்கத்தோட சிதம்பரம் தொகுதி தலைவரானீங்கன்னு சொன்னாக்க வசதியா இருக்கும். இனி நீங்க ‘அடுத்த முதல்வர் ஸ்டாலின்’ அப்படின்னு சொல்லுவீங்களா? இல்ல, ‘அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை’ன்னு சொல்லுவீங்களா?)

*    பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் இந்த தமிழக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. விசாரணையை துரிதப்படுத்தி குற்றவாளிகளை உடனடியாக தண்டிக்க வேண்டும்: டி.டி.வி.தினகரன் 
(பாஸ் உங்க குடும்ப கையிலேயும் தான் ஒரு லேடியை அன்னை சத்யாவும், புரட்சித்தலைவரும் கொடுத்துட்டுப் போயிருந்தாங்க! இன்னும் பல வருஷம் உயிர்வாழ்ந்து, இந்திய தேர்தலை தெறிக்க விட வேண்டிய அந்தம்மாவோட பாதுகாப்பை உங்க குடும்பம் கோட்டை விட்டுடுச்சு. ஆனா நீங்களெல்லாம் ஆட்சியை பத்தி வாய் பேசுறீங்க.)

click me!