சாதியை தூண்டி மதக்கலவரத்திற்கு ராமதாஸ் திட்டமிடுகிறார்... விசிக பகீர் குற்றச்சாட்டு..!

Published : Apr 27, 2019, 05:08 PM IST
சாதியை தூண்டி மதக்கலவரத்திற்கு ராமதாஸ் திட்டமிடுகிறார்... விசிக பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

வன்னியர் சமுதாயத்திற்கும், நாடார் சமுதாயத்தினருக்கும் மோதலை உருவாக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டி உள்ளார்.  

வன்னியர் சமுதாயத்திற்கும், நாடார் சமுதாயத்தினருக்கும் மோதலை உருவாக்க பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு குற்றம்சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மருத்துவர் ராமதாசு அவதூறு பரப்புவதிலும் பிரச்சனையை திசைமாற்றுவதிலும் அவருக்கு நிகர் அவரே. ராமதாசிடம் கோயபல்ஸ் தோற்றுப்போவார். அப்படி எந்த பிரச்சனையானாலும் வன்முறையை தூண்டி வன்னியர் சமுதாயத்தை தவறாக வழிநடத்துவதை ஒரு உத்தியாக கொண்டு வருவதை பார்க்கிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 24.4.2019 அன்று பொன்பரப்பி வன்முறையை கண்டித்து போராட்டம் நடைப்பெற்றது. 

அப்போராட்டத்தில் பேசிய பேராயர் அய்யா எஸ்றா சற்குணம் அவர்கள் முழுக்க, ராமதாசின் வன்முறை அரசியல் குறித்து பேசினார். முழுக்க முழுக்க ராமதாசின் வன்முறை செயல்பாடுகளை விமர்சித்தே பேசினார். வன்னியர் சமூகத்தை எந்த இடத்திலும் அவமதித்து பேசவில்லை. ஆனால், இன்று வந்த ராமதாசின் அறிக்கையில், வன்னியர் சமுதாயத்தை பேராயர் அவமதித்து விட்டார் என்று திசை திருப்பி உள்ளார். அது மட்டுமல்ல, மிக மோசமாக தரம் தாழ்ந்து அய்யா எஸ்றா சற்குணத்தை
விமர்சித்து இந்துத்துவக்கும்பலை தூண்டியும் விட்டுள்ளார். ராமதாசின் உள்நோக்கம், சாதி ரீதியாகவும் மதரீதியாகவும் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதே 
ஆகும். ஒரு பொறுப்பான தலைவரின் அறிக்கையாக இல்லை. அந்த அறிக்கையே மிரட்டும் தொனியிலே உள்ளது.

ராமதாசின் வன்முறை அரசியலை விமர்சித்தால், வன்னியர் சமுதாயத்தையே விமர்சித்ததாக மடை மாற்றும் போக்கு ஆபத்தானது.  பேராயர்  எஸ்றா சற்குணத்தை 
ராமதாசு மிரட்டுவதால் நாடார் சமுதாயத்தையே அச்சுறுத்துகிறார் என்று யாராவது மடை மாற்றினால் என்னவாகும்? நாடார்களுக்கும் வன்னியர்களுக்கும் ராமதாஸ் மோதலை உருவாக்க திட்டமிட்டுள்ளாரா?

மதமாற்றம் குறித்து அவதூறு பரப்புவதன் மூலம் பேராயரை இந்துத்துவக்கும்பலிடம் ராமதாசு காட்டிக்கொடுக்க திட்டமிடுகிறாரோ?  ராமதாசின் அறிக்கையின்  உள்நோக்கம் என்ன? அனைத்து சமுதாய மக்களும் ராமதாசிடம் எச்சரிக்கையாக இருப்போம்’’ எனக் கூறியுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?