போராட்டம்! ஆர்பாட்டம்! அல்லது மாநாடு! இதுதான் தி.மு.க.வா? இதுதான் எதிர்கட்சியா?: ஸ்டாலினை விளாசும் விமர்சனங்கள். 

First Published May 6, 2018, 3:12 PM IST
Highlights
this is protes? this is conferce? against punblic reviews


மோடிலேயே இருக்கிறார். ஆனால் இதை அரசியல் பார்வையாளர்கள் ‘இது சரிதானா? இதனால் ஆன பயன் என்ன?’ என்று கேட்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய கருத்தே. 
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான தமிழக அரசியல் மற்றும் அரசு சூழ்நிலையை விரிவாய் எழுதி விளக்க வேண்டிய அவசியமே இல்லை. குழப்பம் கொத்துக் கொத்தாய்க் குழைதள்ளிக்  கிடக்கிறது. 

ஆளும் அ.தி.மு.க.விலிருந்து பிளவுபட்ட பன்னீர்செல்வம் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தது, தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் முதல்வரை மாற்றிட சொல்லி போர்க் கொடி தூக்குவது என்று ஆயிரத்தெட்டு பிரச்னைகள். டெல்லி ஆசீர்வாதத்தில்தான் மைனாரிட்டி அ.தி.மு.க. அரசு முட்டுக் கொடுக்கப்பட்டு நிற்கிறது என்று ஆளாளுக்கு வெச்சு செய்கிறார்கள் விமர்சனங்களை. 

இந்நிலையில் எதிர்கட்சியான தி.மு.க. எப்போதும் போராட்ட வைபரேட் மோடிலேயே இருப்பது அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள், வேற்று மாநில அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதை விநோதமாக பார்ப்பதாகவும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. 
என்னதான் சொல்கிறார்கள் இதைப்பற்றி...” அரசியலுக்கென்றே பிறவியெடுத்த நல்ல தலைவர்தான் ஸ்டாலின். இத்தனை சரிவுக்குப் பிறகும் நம்பிக்கையோடு அந்த இயக்கத்தை நடத்திச் சென்று கொண்டிருக்கிறார் என்றால் அது அவரது அசாத்திய நம்பிக்கையையும், தலைமைப் பண்பையும்தான் காட்டுகிறது. 

ஆனால் அதே நேரத்தில் போராட்டம், ஆர்பாட்டம், மாநாடு? இதுதான் தி.மு.க.வா? என்கிற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களாய் தி.மு.க.வின் செயல்பாடுகளை கவனியுங்கள்! முரசொலி பவள விழாவை மாநாடு, கருத்தரங்கம் என்று வெகு விமரிசையாக கொண்டாடினார்கள். அது அவசியம். 

அதன் பிறகு ஈரோட்டில் மண்டல மாநாடு கொண்டாடி கிட்டத்தட்ட மூன்று நான்கு நாட்கள் அந்த மோடிலேயே இருந்தார்கள். இதற்கிடையில் நீட், ஜல்லிக்கட்டு, எரிபொருள் விலையேற்றம், காவிரி, போக்குவரத்து துறை ஸ்டிரைக், பேருந்து கட்டண விலையேற்றம், குட்கா விவகாரம்...என்று சதா சர்வ காலமும் போராட்டத்திலேயே கழிந்து கொண்டிருக்கிறது தி.மு.கவின் காலம். 

மனித சங்கிலி, முற்றுகை, ஆர்பாட்டம், ரோடு மறியல், போராட்டம் என்று மீண்டும் மீண்டும் எதிர்ப்பு மற்றும் எதிர்மறை மனநிலையிலேயே கட்சியை கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார். அடுத்த தேர்தலுக்கு தி.மு.க.வின் முதுகில்தான் சாய வேண்டும் என்பதால் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. என்று அத்தனை பேரும் தி.மு.க.வின் வழியில் கொடி பிடித்து ரோட்டில் நின்று கொண்டே இருக்கிறார்கள். 
இப்படி சதா சர்வகாலமும் ரோட்டில் போராட்டம் செய்து கொண்டே இருப்பதால் தினசரி வாழ்க்கை அவ்வளவு பாதிக்கப்படுகிறது. இவர்களின் போராட்டத்தில் கலந்து கொண்டு தினசரி பணமும், உணவும் இத்யாதிகளும் வாங்கி வயிறு வளர்ப்பதையே பிழைப்பாக ஒரு கூட்டம் நம்பி இருக்கிறது.

 

இருக்கின்ற போராட்டங்கள் போதாதென்று வரும் ஜூலை மாதத்தில் மாநில சுயாட்சி மாநாடு என்று ஒன்றை நடத்த தயாராகி வருகிறது தி.மு.க. பி.ஜே.பி.க்கு எதிராக வலுவான ஒரு தளத்தை உருவாக்குவதற்கான முன்னெடுப்புதான் இந்த மாநாடு. 
இதைக் கேட்கும்போதே மக்களுக்கு மனசோர்வு ஏற்படுகிறது. அப்படியானால் கொடி, தோரணம், டிராஃபிக் ஜாம், ஸ்பீக்கர் அலறல்கள், பிரேக்கிங், பிக் பிரேக்கிங், ஃப்ர்ஸ்ட் ரிப்போர்ட் என்று இவர்களை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் மீடியாவால் மக்கள் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறார்கள் சில நேரங்களில். 

எதிர்கட்சி தலைவர் என்பவருக்கு போராடுவது மட்டும் தான் வேலையா? அதைவிடுத்து நேர்மறையாய் பிரச்னைகளை அணுகலாமே! ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஒருநாள் மட்டும் கூட்டம் கூட்டி போய் நிற்பதை விடுத்து நாலைந்து நாட்கள் தூத்துக்குடியில் தங்கி அந்த மக்களோடு கலந்துரையாடி பல விஷயங்களைப் பெறலாம், சொல்லிக் கொடுக்கலாமே. இது ஸ்டாலினை இன்னமும் மக்கள் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்குமே!
குட்கா ஆலைக்கு எதிராக ஒரு நாள் மட்டும் கோவையில் கண்டனம் காட்டி வருவதை விடுத்து, கோவையில் நாலைந்து நாட்கள் தங்கி இளைஞர் அமைப்புகளை அழைத்து குட்கா உள்ளிட்ட போதை வஸ்துக்களால் ஏற்படும் தீமைகளை தங்கள் மருத்துவ அணி மூலமே விளக்கலாமே!

எப்படி குளங்களை தூர் வாரி, அரசுக்கு ஒரு முன்னுதாரணத்தை காட்டினாரோ ஸ்டாலின் அதேபோல் ஒவ்வொரு விஷயத்திலும் ஆக்கப்பூர்வமான, நேரமறையான அணுகுமுறையை உருவாக்க வேண்டியது தான் எதிர்கட்சி தலைவரின் நடவடிக்கையாக இருக்கணும். 
மொத்தத்தில் மக்களின் மனதில் அலுப்பையும், அரசு பற்றிய பயத்தையும் ஊட்டாமல், தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு எப்படி இருக்குமென்று முன்னோட்டம் காட்டும் வகையில் அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.” என்கிறார்கள்.
செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா ஸ்டாலின்?
 

click me!