அவனவன் பிள்ளை பெற முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்... பொசுக்குன்னு சொல்லிட்டாரே ஹெச்.ராஜா..!

Published : Oct 17, 2021, 09:44 PM IST
அவனவன் பிள்ளை பெற முடியாமல் போவதற்கு இதுதான் காரணம்... பொசுக்குன்னு சொல்லிட்டாரே ஹெச்.ராஜா..!

சுருக்கம்

திருமாவளவன் ஒரு சமூக விரோதி என்று தமிழக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா காட்டமாக விமர்சித்துள்ளார்.  

திண்டுக்கல்லில் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ஒரு காலத்தில் சாலைகளில் நாம் இருவர், நமக்கு இருவர், நமக்கு ஒருவர் என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா? சோதனை குழாய் குழந்தை எனப் பெயர் பலகைகள்  அதிகம் காண முடிகிறது. கருணாநிதி வந்த பிறகுதான் மதுபான கடையைத் தமிழகத்துக்கு கொண்டு வந்தார். இந்த மதுக்கடைகளால்தான் அவனவனுக்கு பிள்ளை பெற முடியாமல் போய்விட்டது.
எனவே, மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்ற வேண்டும். அவரவர் பிள்ளை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும். அதிமுகவில் உள்ள குழப்பத்துக்கும் சசிகலா மீண்டும் அரசியல் பிரவேசம் அடைவதற்கு பாஜக ஒரு காரணமாக உள்ளது என்று கூறியிருப்பதன் மூலம் திருமாவளவன்  குழப்பத்தில் இருக்கிறார். யார் இந்த திருமாளவன்? சரக்கு மிடுக்கு பேச்சுகாரர்தானே. திருமாளவன்  ஒரு சமூக விரோதி” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!
ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!