லஞ்சம் வாங்கும் போலீசுக்கு சரியான பாடம்... பெண் இன்ஸ்பெக்டர் அதிரடி கைது..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 27, 2020, 2:53 PM IST
Highlights

அப்போது பணத்தை பெற்றபோதே அதிரடியாக உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் பணத்தை பறிமுதல் செய்ததோடு ஆய்வாளர் அனிதாவையும் கைது செய்தனர். 

மதுரை குற்றபத்திரிக்கையில் பெயரை நீக்க லஞ்சம் பெற்ற பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 11ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பொன்னம்பலம் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவரது மகன் மாரி மற்றும் மருமகன் கமல்பாண்டி ஆகியோரது பெயர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட அடிதடி  வழக்கில் கீழான குற்றபத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது.  இதனையறிந்த நல்லதம்பி சம்பவத்தின் போது தனது மகன் மற்றும் மருமகன் சம்பவ இடத்தில் இல்லை எனவும் சட்டபடியாக பெயர்களை நீக்க வேண்டும் என செக்கானூரணி காவல்நிலையத்தில் ஆய்வாளர் அனிதாவிடம் முறையிட்டுள்ளார். 

குற்றபத்திரிக்கையில் இடம்பெற்றுள்ள பெயர்களை நீக்க வேண்டும் எனில், அதற்கு  1லட்சம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என ஆய்வாளர் அனிதா கேட்டதாகவும் , தவணைமுறையில் பணத்தை செலுத்துமாறும் அவர் கூறியுள்ளார் இந்நிலையில், நல்லதம்பி லஞ்ச ஒழிப்புதுறையினருக்கு அளித்த புகாரையடுத்து காவல்நிலையத்திற்கு நல்லதம்பியுடன் நேரில் சென்ற  லஞ்ச ஒழிப்புதுறையினர், ரசாயனம் தடவிய 30ஆயிரம் ரூபாய் தொகையை வழங்கினர். 

அப்போது பணத்தை பெற்றபோதே அதிரடியாக உள்ளே சென்ற லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புதுறையினர் பணத்தை பறிமுதல் செய்ததோடு ஆய்வாளர் அனிதாவையும் கைது செய்தனர். இதையடுத்து வேறு ஏதேனும் வழக்கில் இது போன்று கையூட்டு பெற்றுள்ளாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தினர். இதையடுத்து மதுரை மாவட்ட சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேல் முன்பாக ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து டிசம்பர் 11ஆம் தேதி வரை நீதிமன்றம் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில்  இன்ஸ்பெக்டர் அனிதா அடைக்கப்பட்டார். 

 

click me!