நாராயணசாமியை அல்லாட வைத்த மல்லாடி கிருஷ்ணா ராவ்.. ஆப்படித்த ஜான் குமார்.. முடிகிறது காங்கிரஸ் சகாப்தம்.?

By Ezhilarasan BabuFirst Published Feb 16, 2021, 12:43 PM IST
Highlights

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ  தீப்பாய்ந்தன் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.  

ஆளும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து முதல்வர் நாராயணசாமிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். இதனால் தனது அமைச்சரவையை கூண்டோடு கலைக்க அவர் முடிவு செய்துள்ளார். தேர்தல் வரை ஆட்சியை போராடி நிறைவு செய்துவிடலாம் என்று எண்ணியிருந்த அவருக்கு சொந்தகட்சி எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு மரண அடியாக விழுந்துள்ளது. 

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் ஆட்சி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ  தீப்பாய்ந்தன் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர். அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர்கள் சபாநாயகர் சிவக்கொழுந்துவிடம் வழங்கினார். அதேபோல் ஏனாம் தொகுதி எம்எல்ஏவான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பேக்ஸ் மூலம் சபாநாயகர் சிவக்கொழுந்துவுக்கு அனுப்பினார். இந்நிலையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் எம்எல்ஏ ஜான் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி முதல்வர் நாராயணசாமிக்கு  அதிர்ச்சி கொடுத்தார். 

அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியின் பலம் குறைந்துள்ளது. சட்டசபையில் உள்ள மொத்தம் 30 இடங்களில் திமுக காங்கிரஸ் கட்சியின் பலம் 19 ஆக இருந்தது. பாகூர் எம்எல்ஏ தனவேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஆளும் கட்சியின் பலம் 18 ஆக குறைந்தது. இந்த நிலையில் அடுத்தடுத்து 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால், ஆளும் காங்கிரஸ் -திமுக கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் பலம் 14  குறைந்துள்ளது. மொத்த பெரும்பான்மைக்கு 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை, இந்த நிலையில் வெரும் 14 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளதால் நாராயணசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகி உள்ளது. எதிர்க்கட்சியான என்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்7 பேர், அதிமுகவில் கூட்டணியில் உள்ள அதிமுக உறுப்பினர்கள் 4, பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேர் என எதிர்க்கட்சியின் பலம் 14 உள்ளது.  

இது நாராயணசாமிக்கு மரண அடியாக விழுந்துள்ளது. ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து மல்லாடி கிருஷ்ணா ராவ் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏனாம் தொகுதியை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். அதேபோல் ஜான் குமார் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு மிகுந்த பிரமுகராக இருந்தார். இவர்களிள் இந்த ராஜினாமா முடிவு நாராயணசாமிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த புதுவை காங்கிரசுக்கும் மரண அடியாக விழுந்துள்து என்பதே உண்மை.  

 

 

click me!