திருவாரூரும் இல்ல திருப்பரங்குன்றமும் இல்ல... உனக்கு திகார் சிறை தான்; அமைச்சர் ஜெயக்குமார் பஞ்ச்!

Published : Aug 22, 2018, 11:01 AM ISTUpdated : Sep 09, 2018, 07:39 PM IST
திருவாரூரும் இல்ல திருப்பரங்குன்றமும் இல்ல... உனக்கு திகார் சிறை தான்; அமைச்சர் ஜெயக்குமார் பஞ்ச்!

சுருக்கம்

டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றமும் கிடைக்காது, திருவாரூரும் கிடைக்காது அவருக்கு திகார் ஜெயில்தான் கிடைக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார். ஜப்பான் நாட்டில் மீன்வளம் சம்பந்தப்பட்ட 3 நாள் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றமும் கிடைக்காது, திருவாரூரும் கிடைக்காது அவருக்கு திகார் ஜெயில்தான் கிடைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். ஜப்பான் நாட்டில் மீன்வளம் சம்பந்தப்பட்ட 3 நாள் நடக்கும் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்துக்கு சென்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது மீன்களை சுகாதாரமாக பிடிப்பது தொடர்பாக அறிந்து கொள்ள செல்கிறேன். மீன்கள் ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறியுள்ளார். 

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தினர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிதி உதவி மற்றும் உணவு, உடை வசதிகளும் செய்து தரப்படும் என்றார். 62 தடுப்பணைகள் செயல்படாத  திட்டம் என்றும் தமிழக மக்களை ஏமாற்றும் செயல் என்று ராமதாஸ் கூறியுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் வழக்கில் தமிழக அரசு தெளிவாக உள்ளது. இந்த விவகாரத்தில் பின் வாங்க போவதில்லை என்றார். டிடிவி தினகரன் திருப்பரங்குன்றமும்  திருவாரூரும்  எங்களுக்குதான் என்று கூறி வருகிறார். அவர்களுக்கு திருப்பரங்குன்றமும் கிடைக்கபோவதில்லை. திருவாரூரும் கிடைக்கபோவதில்லை. அவருக்கு கிடைக்கப்போவது திகார் ஜெயில் தான் என்று கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!