திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்க நீதிமன்றத்தில் மனு…. பின்னணியில் திமுக ? பகீர் தகவல் !!

By Selvanayagam PFirst Published Jan 2, 2019, 10:23 PM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து திருவாரூர் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக நினைப்பதால் , தற்போது அங்கு தேர்தலை நடத்த அக்கட்சி விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இடைத் தேர்தலை ஒத்தி வைக்கக் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் பின்னணியில் திமுக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவால் திருவாரூர் தொகுதி காலியாக உள்ளது. அந்த தொகுதிக்கு வரும் 28 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் , வேட்பாளர்கள் தேர்வு போன்றவற்றில் திமுக, அதிமுக, அமமுக போன்ற கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜின் நெருங்கிய நண்பரான கலிய பெருமாள் பெயர் அடிபடுகிறது. அதே போல் கடந்த தேர்தலில் கருணாநிதியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த பன்னீர் செல்வம் நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அமமுகவைப் பொறுத்த வரை அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் காமராஜ நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

திமுகவில் பூண்டி கலைவாணன் எப்படியாவது சீட் வாங்கிவிட துடிக்கிறார். ஆனால் மாவட்டத்தில் அவர் பெயர் டேமேஜ் ஆகிக்கிடப்பதாகவும் பேசப்படுகிறது. அதே நேரத்தில் திருவாரூர் திமுக ஒன்றியச் செயலாளர் தேவாவுக்கு கருணாநிதி மகள் செல்வியின் ஆதரவு உள்ளதால் அவருக்கு சீட் கொடுக்கலாமா என திமுக மேலிடம் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனாலும் கருணாநிதியின் சொந்த தொகுதியான திருவாரூரை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்ககூடாது எனவும் அவரது குடும்பத்தில் யாராவது ஒருவரை நிறுத்தினால் தான் சரியாக இருக்கும் எனவும் ஸ்டாலினின் உறவினர்களே அட்வைஸ் பண்ணுவதாகவும் ஒரு செய்தி ஓடுகிறது.

இது இப்படி இருக்க, திருவாரூருக்கு இப்போது இடைத்தேர்தல் வேண்டாம் என நினைக்கிறார் ஸ்டாலின். தற்போது இந்த தேர்தலில் திமுகவின் பலத்தைக் காட்டுவதைவிட நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து வைத்து நடத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறாராம்.

இதன் அடிப்படையில்தான் திருவாரூர் தேர்தலை தள்ளி வைக்ககோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணி திமுக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

திருவாரூர் தேர்தலை நடத்தக் கூடாது என உச்சநீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த. இரண்டு வழக்கிகளின் பின்னணியிலும் திமுக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகிறார். இன்னொரு வழக்கு விவசாயச் சங்கத்தின் சார்பில் போடப்பட்டது. இதற்கு சல்மான் குர்ஷித் ஆஜராகிறார். இந்த இரண்டு வழக்கறிஞர்களுக்குமே குறைந்த பீஸே 50 லட்சம். அந்த பீஸை கொடுத்து வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததே திமுகதான் என்று சொல்கிறார்கள். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

click me!