
சென்னை திருவேற்காட்டில் நடைபெற்று வரும் வணிகர் சங்க தினத்தில் 35 வது ஆண்டு மாநாட்டில் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு பேசிவருகிறார்கள்.
இதில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க கட்சித் தலைவர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் அதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசும் கலந்து கொண்டு பேசினார்.
மோடியின் அரசாங்கம் அதானி அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கானது ஏழைகளுக்கானது அல்ல. சுவிஸ் வங்கியில் கருப்புப் பணத்தை மீட்டுதருவதாக சொன்னவர் கடைசியாக மக்களின் சுருக்குபை பணத்தை கொள்ளையடித்துவிட்டார் என திருநாவுக்கரசர் குற்றம் சாட்டினார். மோடியை அகற்ற ராகுலால் மட்டுமே முடியும் மூன்றாவது நான்காவது அணி உருவாகாது.