நான் ஜெயலலிதாவையே பார்த்தவன்...! குஷ்பு எம்மாத்திரம்... செருப்பு, முட்டையால் அடித்து வெளியேற்றுவோம்..! கேள்விகளால் கதறவிடும் திருநாவுக்கரசர்...!

Asianet News Tamil  
Published : May 17, 2018, 04:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
நான் ஜெயலலிதாவையே பார்த்தவன்...! குஷ்பு எம்மாத்திரம்... செருப்பு, முட்டையால் அடித்து வெளியேற்றுவோம்..!  கேள்விகளால் கதறவிடும்  திருநாவுக்கரசர்...!

சுருக்கம்

thirunavukkarasar scolding kushpoo

நடிகை குஷ்பு திமுகாவில் இருந்தபோது முட்டை, மற்றும் செருப்பால் அடித்து வெளியேற்றப்பட்டவர் என்றும் மீண்டும் அதே நிலை குஷ்புவுக்கு வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியில் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் எச்சரித்துள்ளார்.

குஷ்பு பேசியது:

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை விரைவில் மாறும் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்திருந்தார் செய்தியாளர்களிடம் பேசினார். 

வலுக்கும் கண்டனம்:

இவரின் இந்த பேச்சுக்கு, திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குஷ்பு திமுகவில் இருந்தபோது ஏன் வெளியேற்றப்பட்டார் என்பது தமிழக மக்களுக்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். அவரை முட்டை மற்றும் செருப்பால் அடித்து வெளியேற்றினார்கள். அந்தநிலை காங்கிரஸ் கட்சியிலும் திரும்பும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புவதாக கூறினார்".

மேலும் "நான் ராகுல்காந்தியின் நேரடி உத்தரவின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே என்னை பற்றி பேசுவதற்கு குஷ்புவிற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என குஷ்பு கூறுகிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி நீக்கம் செய்ய அவர் யார்..? பத்திரிக்கைகளில் செய்தி வர வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா...? என்று கோபமாக பல கேள்விகளை எழுப்பினார்.

இதைதொடர்ந்து பேசிய இவர் நான் ஜெயலலிதாவையே பார்த்தவன், குஷ்பு எம்மாத்திரம். 2 மாதத்தில் என்னை தலைவர் பதவியில் இருந்து தூக்கி விடுவதாக கூறுகிறார். அப்படி என்னை பதவியில் இருந்து தூக்காவிட்டால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ய அவர் தயாரா என்றும் சொன்னது நிறைவேறவில்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா? வேண்டாத வேலைகளில் தலையிட்டு கயிறு திரிப்பதை விட்டு விட வேண்டும் என குஷ்புவை கடுமையாக எச்சரித்தார்.
 


 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!