
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பல கருத்துகளை வெளியிட்டார்
ஆர்.கே. நகர் தேர்தல்
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆர்.கே.நகரில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பொறுவார் என்றும்,
கந்து வட்டி சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கந்துவட்டி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,மாவட்ட தலைநகரில் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
ஜெயலலிதா சிகிச்சை
ஜெயலலிதா 75 நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போது இருந்த அப்போதைய முதலமைச்சர், இன்னாள் முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள் உள்பட அனைவரிடம் விசாரிக்க வேண்டும்.
ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லாமல் தடுத்தவர்கள் யார் என்பதையும் விசாரிக்கப்பட வேண்டும். எல்லா உண்மைகளும் நீதி விசாரணையில் வெளிவர வேண்டும் குறிப்பிட்டு உள்ளார்
இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னத்தை வென்று முதல்வரும் துணை முதல்வரும், தொண்டர்களும் அதிக உற்சாகத்தில் உள்ள போது,திடீரென காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர் இந்த பிட்டு எதுக்காக போட்டாருனு தெரியல....