திருமுருகன் காந்தி விரைவில் நல்ல முறையில் வீடு திரும்புவார்..!! மே-17 இயக்கம் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Mar 31, 2019, 3:00 PM IST
Highlights

சிறையில் திருமுருகன் காந்திக்கு பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டதன் காரணமாகவே கடந்த 3 வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால் அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று மே-17 இயக்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிறையில் திருமுருகன் காந்திக்கு பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டதன் காரணமாகவே கடந்த 3 வாரங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகையால் அவர் விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார் என்று மே-17 இயக்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி கடந்த ஆண்டு திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். அதன் பிறகு தொடர்ந்து மேலும் பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு திருமுருகன் காந்தி பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் தனி அறையில் யாரும் இல்லாத ஒரு இடத்தில் பாம்புகள் நடமாட்டம் வகையில் திருமுருகன் காந்தி சித்திரவதை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

 

காவல் துறையில் திருமுருகன் காந்திக்கு முறையான உணவு வழங்கவில்லை என்றும் இதனால் அவருக்கு கடும் வயிற்றுப்போக்கு மற்றும் குடல் புழுக்கள் ஏற்பட்டு அல்சரால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு திருமுருகன் காந்தி அனைத்து வழக்குகளிலும் இருந்து ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். ஆனால் முன்புபோல் திருமுருகன் காந்தி எந்த விவகாரங்களிலும் ஈடுபாடு இல்லாமல் ஒதுங்கியிருக்கிறார். அவர் சிறையில் இருந்து வந்த பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக பல வதந்திகள் பரவி வந்தன. 

இதனையடுத்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் விசாரித்த போது திருமுருகன் காந்தி சிறையில் இருந்தபோது மெல்லக் கொல்லும் பாதரசத்தை உணவில் கலந்து சிறை அதிகாரிகள் கொடுத்துள்ளதாக திடுக் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்தான் திருமுருகன் காந்திக்கு தற்போது வரை வயிற்று வலி மற்றும் அல்சர் சரி ஆகவில்லை என்றும் சிறையில் பாதரசம் கொடுக்கப்பட்டதை உறுதி படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணமடைந்து திரும்புவார் என்று மே-17 இயக்கம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!