’காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த வேண்டும்’...அடம் பிடிக்கும் தி.மு.க....

Published : Mar 31, 2019, 02:44 PM IST
’காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் சேர்த்தே தேர்தல் நடத்த வேண்டும்’...அடம் பிடிக்கும் தி.மு.க....

சுருக்கம்

இடைத்தேர்தல் விவகாரத்தில் குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே மீதமிருக்கும் 4 தொகுதிகளுக்கும் உடனே இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க.சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் 18.4.19 அன்று 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. ஏற்கனவே காலியாக உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுடன் சூலூர் தொகுதியும் சமீபத்தில் சேர்ந்துகொண்டது. இதனால் நான்கு தொகுதிகள் காலியான சட்டப்பேரவைத் தொகுதிகள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை உடனே நடத்தவேண்டும் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் இன்று மனு அளித்தனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி,”திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் என 4 தொகுதிகளுக்கும் இந்தத் தேர்தலின் போதே இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்தவேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளோம். குஜராத்திற்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் தமிழகத்துக்கு ஒருமாதிரியான மனப்பான்மையுடனும் இருந்து தேர்தல் ஆணையம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

திமுகவின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில், மாலை 6 மணிக்கு மேல் வருமானவரித்துறையினர் ஆய்வு மேற்கொண்டது தவறு. பாஜகவும் அதிமுகவும் இப்படியெல்லாம் மிரட்டி, வெற்றியைத் தடுக்கப் பார்க்கிறது. இவற்றையெல்லாம் தாண்டி திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பது உறுதி”என்றார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?