தனிமை சிறை...! சோப்பு கலந்த உணவு!! 55 நாளும் வயிற்று போக்கு! திருமுருகன் காந்தி சிறையில் அடைந்த சித்ரவதை!!!

By vinoth kumarFirst Published Nov 1, 2018, 9:31 AM IST
Highlights

வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த திருமுருகன் காந்தி 55 நாட்களாக தான் எதிர்நோக்கிய சித்ரவதைகளை பட்டியலிட்டுள்ளார்.

வேலூர் சிறையில் இருந்து விடுதலையாகி வந்த திருமுருகன் காந்தி 55 நாட்களாக தான் எதிர்நோக்கிய சித்ரவதைகளை பட்டியலிட்டுள்ளார். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசி திரும்பிய திருமுருகன் காந்தியை மூன்று மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் வைத்து போலீஸ் கைது செய்தது. இதன் பின்னர் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு 55 நாட்கள் சிறைவாசத்தை முடித்து திருமுருகன் காந்தி விடுதலையான நிலையில் நேராக மருத்துவமனைக்கு சென்றார். 

15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு திருமுருகன் காந்தி வீடு திரும்பி தனது அன்றாட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் சிறையில் தனக்கு நேர்ந்த சித்தரவதைகளையும் திருமுருகன் காந்தி வெளிப்படுத்தி வருகிறார். சமூக ஊடகங்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் திருமுருகன் காந்தி அளித்த பேட்டி பின்வருமாறு:- கைது செய்யப்பட்டதுமே வேலூர் சிறைக்கு என்னை கொண்டு சென்றார். வேலூர் சிறையில் என்னை அடைத்த பிளாக்கில் வேறு எந்த கைதியும் இல்லை. நிறைய அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என்னை அடைத்து வைத்தார்கள்.  

எனக்கு பக்கத்தில் உள்ள அறைகளில் யாருமே கிடையாது. நான் மட்டும் தனிமை சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரே ஒரு காவலர் மட்டும் எப்போதும் என்னுடன் இருப்பார். நான் குளிக்கும் போது கூட என்னை அவர் தனிமையில் விடமாட்டார். என் குழந்தைகளுடன் நான் பேசும் போது கூட அந்த காவலர் எனக்கு அருகிலேயே நிற்பார். வேலூர் சிறையில் மற்ற கைதிகளில் ஒருவரை கூட 55 நாட்களில் என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. எப்போதும் தனிமையிலேயே அமர்ந்திருப்பேன். சாப்பாட்டை பொறுத்தவரை நான் சிறைக்கு சென்றதுமே எனக்கு உணவு கொடுக்கப்பட்டது.

 

ஆனால் அந்த உணவில் சோப்பு நாற்றம் அடித்தது. இதனா இரண்டு நாட்கள் நான் சாப்பிடவில்லை. ஆனால் 3வது நாள் வேறு வழியின்றி சோப்பு நாற்றத்துடன் கூடிய உணவை சாப்பிடவேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று முதல் எனக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. வயிற்று போக்கு ஏற்பட்டது. வயிறும் வீங்கிவிட்டது. அப்படி இருந்தும் கூட எனக்கு வேறு நல்ல உணவு வழங்கப்படவில்லை. தொடர்ந்தே அதே உணவு தான் கொடுக்கப்பட்டது.

 

உடல் நிலை மோசமானதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட சிறைக்காவலர்கள் என்னை விட்டு அகலவில்லை. என்னை மீண்டும் தனிமை சிறையில் அடைப்பதிலேயே குறியாக இருந்தனர். ஒரு நாள் நாய் சாப்பாடு இல்லாமல் வயிற்று வலியுடன் மயங்கி விழுந்தேன். சிறைக் காவலர் ஒருவர் தான் என்னை தனது தோளில் தூக்கிக் கொண்டுஓடி மருத்துவமனையில் அனுமதித்தார்.

இதே போல் நான் தங்கியிருந்த அறைக்குள் பாம்பு ஒன்று வந்தது. பகல் நேரமாக இருந்த காரணத்தால் பாம்பு என்னை கடிக்கவில்லை. சிறைக்காவலர் உதவியுடன் பாம்பை விரட்டினே. இப்படியாக 55 நாட்களும் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதை செய்தே வெளியே அனுப்பினார்கள். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

click me!