இடைத் தேர்தலுக்குப் பிறகு யாருக்கு ஆதரவு ? கருணாஸ் அதிரடி அறிவிப்பு !!

By Selvanayagam PFirst Published Nov 1, 2018, 8:58 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அமமுகக்கும் இடையே தான் போட்டி என்றும். அதிமுக சீனிலே இல்லை என்றும் தெரிவித்த நடிகர் கருணாஸ் 20 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை அறிவிப்பேன் என கூறினார்.

தமிழகத்தில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்ததையடுத்து அந்த 18 தொகுதிகளும் காலியாக உள்ளன. மேலும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் மறைந்ததையடுத்து அந்த இரண்டு தொகுதிகள் என மொத்தம் 20 தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏளும் உச்சநீதீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளதால் இந்ததொகுதிகளில் இடைத் தேர்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட ஒரு மினி பொதுத் தேர்தல் போல் நடைபெறவுள்ளது. இதில் திமுக, அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் இடையே போட்டி இருக்கும் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்நிலையில் வேலூர் மாவட்டம் வாலாஜாவில் முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் மகிழ்ச்சிக் கூட்டம் நடைபெற்றது, அதில் அந்த அமைப்பின் தலைவர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் திமுகவுக்கும், அமமுகக்கும் இடையே தான் போட்டி என்றும். அதிமுக சீனிலே இல்லை என்றும் தெரிவித்தார். 20 தொகுதிகளின் இடைத் தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பேன் என கருணாஸ் கூறினார்.

click me!