மருத்துவமனையில் திருமுருகன் காந்தி - ஸ்டாலின் சந்திப்பு!

By vinoth kumarFirst Published Oct 4, 2018, 12:36 PM IST
Highlights

ஜாமினில் விடுவிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல் நலம் பற்றி கேட்டறிந்தார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல் நலம் பற்றி கேட்டறிந்தார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றதாலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கேட்டு போராடியதாலும், சீர்காழியில் பெரியார் பிறந்தநாள் கூட்டத்தில் போராட்டத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பேசிவிட்டு நாடு திரும்பிய திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தினர். தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது. சுமார் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலூர் தனிமை சிறையில் திருமுருகன் காந்த் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து, திருமுருகன் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

 

திருமுருகன் காந்தி, ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் வெளியே வந்த அவர், மக்களுக்குகாக பேசப்படுபவர்கள், கைது செய்யப்படுவதாக கூறினார். திருமுருகன் காந்தி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனை சென்று திருமுருகன் காந்தியை நேரில் சென்று சந்தித்தார். அப்போது திருமுருகன் காந்தியின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

click me!