அண்ணன் வைகோ மேல பாய்ந்த, அந்த சட்டத்தையே நீக்கனும்... இது வேற லெவல் சொம்புன்னு கலாய்க்கும் நெட்டிசன்ஸ்....

By sathish kFirst Published Jul 6, 2019, 2:09 PM IST
Highlights

அண்ணன் வைகோ மீது போடப்பட்ட தேசத்துரோக சட்டப்பிரிவு எந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டதோ அதே இங்கிலாந்து இப்போது சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டது அதேபோல இந்தியாவிலும் நீக்கவேண்டும் என  திருமா வலியுறுத்தியுள்ளார்.
 

அண்ணன் வைகோ மீது போடப்பட்ட தேசத்துரோக சட்டப்பிரிவு எந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டதோ அதே இங்கிலாந்து இப்போது சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கிவிட்டது அதேபோல இந்தியாவிலும் நீக்கவேண்டும் என  திருமா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக திரு வைகோ மீது தொடுக்கப்பட்ட தேசத்துரோக வழக்கில் சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்துவரும் நேரத்தில் சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கி இருப்பது வேதனை அளிக்கிறது.

124 ஏ என்ற தேசத்துரோக சட்டப்பிரிவு எந்த பிரிட்டிஷ் அரசால் உருவாக்கப்பட்டதோ அந்த இங்கிலாந்து நாட்டிலேயே இப்போது சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது அப்படி இருக்கும்போது காலனிய கால ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட அந்த சட்டப்பிரிவை சுதந்திர இந்தியாவில் பயன்படுத்துவது பொருத்தமற்றது .

திரு வைகோ அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை அவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்குத் தடையாக இல்லை என்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. எனினும், அரசாங்கத்துக்குப் பிடிக்காதவர்கள் எவரையும் இந்த தேசத்துரோகக் குற்றம் சாட்டி முடக்கிவிடலாம் என்ற ஆபத்து நிலவுவது சனநாயகத்துக்கு உகந்ததல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம் எனக் கூறியுள்ளார்.

இதுவரை இந்த தீர்ப்பு வந்ததும் அரசியல் தலைவர்கள் பலரும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.  தந்தை பெரியாரின் பேரன், திராவிட இயக்கப் போர்வாள்! அப்படி இப்படி என  மானாவாரியா பொங்கினார். ஆனால் திருமாவோ தேசத்துரோக சட்டத்தையே வைகோவுக்காக ரத்து செய்யவேண்டும் என வெற லெவலில் அறிக்கை வெளியிட்டுள்ளதை நெட்டிசன்ஸ் கலாய்த்து தள்ளுகின்றனர்.

click me!