சின்னத்தால் பயப்படுகிறது அதிமுக - வெளுத்து வாங்கும் திருமா...!

Asianet News Tamil  
Published : Sep 04, 2017, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
சின்னத்தால் பயப்படுகிறது அதிமுக - வெளுத்து வாங்கும் திருமா...!

சுருக்கம்

thirumavalavan said admk fear to local election

சின்னம் முடக்கப்பட்டதாலே உள்ளாட்சி தேர்தலை அதிமுக தள்ளி வைக்க நினைக்கிறது என்றும், நவ.17-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆட்சி முடிந்தது. இதையடுத்து அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் இரு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் முறைக்கேடு நடந்ததாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது. மேலும், ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியது.

ஆனால் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி முடியவில்லை எனவும்,  அனைத்து பணிகளும் முடிந்தவுடன் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் அணையம் தெரிவித்தது. 

இதைதொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் குறித்த இறுதி தீர்ப்பு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தலைமையில் வெளியானது. அதில், நவம்பர் 17 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என அதிரடியாக உத்தரவிட பட்டுள்ளது. 

இந்நிலையில், செங்கல்பட்டில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சின்னம் முடக்கப்பட்டதாலே உள்ளாட்சி தேர்தலை அதிமுக தள்ளி வைக்க நினைக்கிறது என்றும், நவ.17-க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

தேர்லுக்காக ஸ்லோ பாய்ஸன் கொடுத்து கொல்லப்பட்ட கலீதா ஜியா... வங்கதேச அரசியலில் அதிர்ச்சி..!
டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!