
தமிழகத்தில் அதிமுக ஆட்சி செய்கிறதா? பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்கிறதா என்பது தெரியவில்லை என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கரூரில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதவாதத்திற்கும் ஜாதிய அரசியலுக்கும் தமிழகத்தில் இடமில்லை என தெரிவித்தார்
நவம்பர் 8 ஆம் தேதி தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அறிவிக்கப்பட்டு சென்னையில் கண்டன மாநாடு நடைபெற உள்ளதாகவும் கூறினார். மயிலாடுதுறையில் வரும் 9 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது டெல்டா மாவட்ட தோழர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தமிழகத்தில் ஆட்சியும், கட்சியும், அதிமுக கட்டுப்பாட்டில் உள்ளதா? பாஜக கட்டுப்பாட்டில் உள்ளதா? என தெரியவில்லை என்றார். தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதே பாஜக வன்முறை வெளியாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும் ஒருவேளை அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.