எத்தனை கட்சிகள் வந்தாலும் கவலையில்லை... எங்கக் கூட்டணியை அசைக்க முடியாது... திருமா கூல் பதில்!

By Asianet TamilFirst Published Feb 13, 2020, 10:41 PM IST
Highlights

திமுக தலைமையிலான எங்களுடைய கூட்டணி வலுவாக உள்ளது. உள்ளாட்சி இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து சந்திக்கும். திமுக தலைமையிலான கூட்டணி சட்டப்பேரவை பொதுத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும். எத்தனை கட்சிகள், அணிகள் தோன்றினாலும் எங்கள் கூட்டணியை அசைக்க முடியாது. அதைத் தேர்தலில் உறுதி செய்வோம்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 

எத்தனை கட்சிகள், அணிகள் தோன்றினாலும் எங்கள் கூட்டணியை அசைக்க முடியாது என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் வரும் 22 அன்று திருச்சியில் தேசம் காப்போம் பேரணி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஆதரவு திரட்ட அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருச்சிக்கு வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


“சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க டி.இ.எல்.சி.  திருச்சபை பேராயர்கள், சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி. உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளைன் சந்தித்து அழைப்பு விடுத்தோம். இது அனைத்து சிறுபான்மையினர், ஏழை, மக்களுக்கு எதிரான சட்டம். இந்தச் சட்டத்தால் இந்துக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே சிறுபான்மையினர் மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் பங்கேற்க விசிக பேரணியை ஒருங்கிணைக்கிறது. இதில் கணிசமானோர் பங்கேற்பார்கள்.
எத்தனை போராட்டம் நடத்தினாலும் இச்சட்டத்தை வாபஸ் வாங்க மாட்டோம் என மோடியும், அமித்ஷாவும் பிடிவாதம் காட்டுகிறார்கள். ஆனால், இச்சட்டத்தை திரும்ப பெறும்வரை விசிக அறவழியில் போராடும். திமுக தலைமையிலான எங்களுடைய கூட்டணி வலுவாக உள்ளது. உள்ளாட்சி இந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இணைந்து சந்திக்கும். திமுக தலைமையிலான கூட்டணி சட்டப்பேரவை பொதுத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெறும். எத்தனை கட்சிகள், அணிகள் தோன்றினாலும் எங்கள் கூட்டணியை அசைக்க முடியாது. அதைத் தேர்தலில் உறுதி செய்வோம்.” என்று திருமாவளவன் தெரிவித்தார்.
ரஜினியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மழுப்பலான பதில் கூறியது பற்றி திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று திருமாவளவன் தெரிவித்தார்.

click me!