டெல்லி முதல்வர் பதவி ஏற்பு விழாவில் சிறப்பு அழைப்பாளர் இந்த குழந்தை தானாம்.!! யார் அந்த குழந்தை.?

By Thiraviaraj RMFirst Published Feb 13, 2020, 8:18 PM IST
Highlights

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 3வது முறையாக முதல்வராகி இருக்கிறார் கெஜ்ரிவால். வரும் பிப்16ம் தேதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவின் கதாநாயகனாக கலந்துகொள்ளப்போவது யார் தெரியுமா? 

  By: T.Balamurukan

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆம் ஆத்மி 3வது முறையாக முதல்வராகி இருக்கிறார் கெஜ்ரிவால். வரும் பிப்16ம் தேதி பதவியேற்க இருக்கிறார். இந்த பதவியேற்பு விழாவின் கதாநாயகனாக கலந்துகொள்ளப்போவது யார் தெரியுமா? 

முதல்வராக பதவி ஏற்கும் கெஜ்ரிவால் தன்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு தனக்கு வாக்களித்த டெல்லி மக்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட உள்ளதாகவும், பிற மாநில முதல்வர்களுக்கோ, அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ அழைப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில், ஒரே ஒரு சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட இருக்கிறதாம். அவர், யார் என்று கேட்டால் எல்லோருக்கும் வியப்பாகத் தான் இருக்கும். அவர் யாரென்றால், 'பேபி மஃப்ளர்மேன்' என்று அழைக்கப்படும் ஆவ்யன் டோமர்தான்.

யார் இந்த பேபி?
டெல்லி, சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, கெஜ்ரிவாலைப் போன்று ஆடை அணிந்துகொண்டு தலையில் தொப்பி வைத்துக் கொண்டு திரும்பியப் பக்கமெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த குழந்தைதான் ஆவ்யன் டோமர்.ஒரு வயதுக்கும் குறைவான இந்த குழந்தை, கண்ணாடி மற்றும் தொப்பி அணிந்துகொண்டு, கெஜ்ரிவாலைப் போல ஒட்டு மீசையும் வைத்துக் கொண்டு, தேர்தல் வெற்றியின் உற்சாகக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது. இந்த குழந்தை டெல்லி மயூர் விஹார் பகுதியில் வசிக்கும் ஆம்ஆத்மி தொண்டரான ராகுல் குழந்தை தான் ஆவ்யன்டோமர்.பிப்ரவரி 16ம் தேதி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவுக்கு ஆவ்யன் டோமருக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த விழாவில் ஆவ்யன்டோமர் தான் கதாநாயகனாக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பார் என்று எல்லோராளும் எதிர்பார்க்கப்படுகிறது.


 

click me!