நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா..? தயாநிதி மாறன் பேச்சால் அதிர்ச்சி... தோழமையோடு சுட்டிகாட்டும் திருமாவளவன்!

By Asianet TamilFirst Published May 15, 2020, 7:57 AM IST
Highlights

“எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார்."

திமுக எம்.பி. தயாநிதி மாறன்,  'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிப்பதாக விசிக  தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி ஆகியோர் தலைமை செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து வழங்கினார்கள். இந்தச் சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் எங்களை அவமானப்படுத்தும்விதமாக நடந்துகொண்டார் என்று திமுக எம்.பி.க்கள் குற்றம் சாட்டினர். அவருடைய அறையில் தொலைக்காட்சி பெட்டியின் சத்தத்தை அலறவிட்டு சத்தத்தை கூட குறைக்க விடாமல் எங்களை அவமானப்படுத்தினார் என்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், “எங்களை மூன்றாம் தரம் மக்களை போல நடத்தினார். நாங்கள் எல்லாம் என்ன தாழ்த்தப்பட்டவர்களா? நாங்கள் அவரைச் சந்தித்தபோது அவரது அறையில் தொலைக்காட்சிப் பெட்டி அலறுகிறது. தொலைக்காட்சி சத்தத்தை கூட அவர் குறைத்து வைக்கவில்லை. எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கத்துடன் நடந்துகொண்டார். திமுக தலைவரின் ஒன்றிணைவோம் வா திட்டத்தைப் பார்த்து அவர் பொறாமைப்படுகிறார்” என்று தயாநிதி மாறன் பேசினார்.


தற்போது தயாநிதி மாறனின் இந்தப் பேச்சு சர்ச்சையாகி உள்ளது. “நாங்கள் எல்லாம் தாழ்த்தப்பட்டவர்களா..” என்று அவர் பேசியது தாழ்த்தப்பட்ட மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக சர்ச்சையகி உள்ளது. தயாநிதி மாறனின் இந்தப் பேச்சுக்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எதிர்வினையாற்றி இருக்கிறார். 
இதுகுறித்து அவர் தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில், “தலைமைச்செயலாளர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது சரி. ஆனால், அந்தவேகத்தில் 'நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களா'என்றது அதிர்ச்சியளிக்கிறது. அதில் உள்நோக்கமில்லை, என்றாலும் இம்மண்ணின் மைந்தர்களின் உள்ளத்தைப் பாதித்திருக்கிறது.இது தோழமை சுட்டுதல்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். “அதில் உள்நோக்கமில்லை” என்று தெரிவித்து பதிவிட்டதைப் பலரும் விமர்சித்துவருகிறார்கள்.

click me!