திட்டினாலும் திமுகவை விட்டுக்கொடுக்காத வைகோ! அதிமுகவிற்கு தாவும் திருமா... ஒரே நாளில் நடந்தது என்ன? என்ன காரணம்

By sathish kFirst Published Dec 9, 2018, 7:42 PM IST
Highlights

கடந்த சில நாட்களுக்கு முன்பு வைத்த திமுக பொருளாளர் வைத்த  ட்விஸ்ட்டாலும், கடந்த சில நாட்களாக வைகோ கொடுக்கும் லந்து என திருமாவளவனை அதிமுகவோடு கூட்டணி சேர இப்போதே துண்டு போட்டு வைத்திருப்பது அறிய முடிகிறது.

நாடாளுமன்ற தேர்தலின் திமுக தலைமையிலான அணியே வெற்றிபெறும் . முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஜெயில் ரெடியாகிவிட்டது. 20 தொகுதிகளில் வென்று திமுக ஆட்சியை பிடிக்கும்.  நான் கலைஞரிடம் கொடுத்த வாக்குப்படி தளபதி ஸ்டாலினுக்கு துணையாக இருப்பேன். மதிமுக ஆரம்பகால தொண்டனுக்கு எப்போதும் தனிமரியாதை உண்டு என்றார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விசிக தலைவர் திருமாவளவன், அதிமுகவிற்கு ஆதரவான கருத்தை வைத்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறைத்து மதிப்பிட முடியாது என்றும், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி கவிழ்ந்துவிடும் என பலரும் கூறிய நிலையில், ஆட்சியையும் கட்சியையும் திறம்பட நடத்துவதாகவும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

பட்டியலினத்தவர் அதிகாரப் பகிர்வு தொடர்பாக, வைகோ தெரிவித்த கருத்துக்கு வன்னி அரசு போட்ட பதிவு மதிமுகவை கொந்தளிக்க செய்ததால் கைச்செலவுக்கு காசு கொடுத்த மேட்டரை சபையில் அவிழ்த்துவிட்டு திருமாவை அசிங்கப்படுத்தினார். வைகோவின் இந்த செயல் கடந்த சில நாட்களாக கடுமையான மனவுளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சமயத்தில் தான் திருமாவின் அதிமுகவிற்கு ஆதரவான ஒரு பேட்டி கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. அதேபோல நேற்று தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் ஓட்டப்பிடாரத்தில் பேசிய  வைகோ கருணாநிதிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவேன் என அழுத்தம் திருத்தமாக திமுக திட்டினாலும் திமுகவை விட்டுக்கொடுப்பதாக இல்லை என்ற முடிவில் இருப்பதாக தெரிகிறது.

இதனைத் அடுத்ததாக மற்றொரு பேட்டியில் திமுக கூட்டணியில் பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், விடுதலை சிறுத்தைகளை பழித்து பேசுவதை குறிக்கோளாக அவர்கள் வைத்துள்ளனர். திட்டமிட்டு எங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாமக இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலை சிறுத்தைகள் இருக்காது என தெளிவாக கூறியுள்ளார்.

இதற்க்கு காரணம் திமுக பொருளாளர் துரைமுருகன் உயர் நிலை செயல் திட்டக்குழுவில் பேசிய அவர், பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என்று கருத்து தெரிவித்தார். துரைமுருகன் முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கியை விட பாமகவின் வாக்கு வங்கி அதிகம். இந்த இரு கட்சிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அளவு தனது ஓட்டுகளை மடைமாற்றுவதில் விடுதலை சிறுத்தைகளைவிட பாமகவே முன்னணியில் இருக்கும் என்பதும் துரைமுருகனின் அனுபவ ரீதியான கருத்து. அந்த அடிப்படையில் அவர் பாமகவை உள்ளே வாய்ப்பிருப்பதால் திருமாவே திமுக கூட்டணிக்கு குட் பை சொல்லும் விதமாக அதிமுகவை பாராட்டியிருக்கிறார்.

click me!