திருமாவளவன் தேர்தலில் போட்டியிட்டதே செல்லாது... அதிரடியாய் கிளம்பும் ‘ஆட்டுக்குட்டி’ புகார்..!

By Vishnu PriyaFirst Published Apr 19, 2019, 3:44 PM IST
Highlights

ஆளுங்கட்சி கூட்டணியினர் கொடுக்கும் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்க்க முடியுமா? அட ஆட்டுக்கறி வாங்குறதுக்காவது பணம் கொடுக்க வேண்டாமா?: திருமாவளவன். (ஏம்ணே வாய வீணா கொடுத்து, வம்பை விலைக்கு வாங்கிக் கட்டுறீங்க? தேர்தல் முடிஞ்சுடுச்சுன்னு நினைக்காதீங்க...’திருமா வாக்களிக்க பணம் கேட்க மக்களை தூண்டினார்’னு ஒரு புகாரை கொடுத்து, நீங்க போட்டியிட்டதே செல்லாதுன்னு சொல்லிடுவாய்ங்க.)

* நான் தொடர்ந்து ராகுலின் பேச்சைக் கவனித்து வருகிறேன். அதில் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஒரு இசையை ரசிப்பது போல் ராகுலின் பேச்சை நான் ரசிக்கிறேன்: கேரளாவில் ராகுலின் மொழிபெயர்ப்பாளர் ஜோதி. (வர்ரே வாவ்! ராகுல் ஏட்டன் சம்சாரிக்கிறது மியூஸிக் போலானு என்ட ப்ரியமான கேரளத்தின்டே சேச்சிகளே)

* தமிழகத்தில் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் எதுவுமில்லாமல் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு முடிந்தது: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. (ஆமாங்க ஆபீஸர்...அந்த ஊர்ல வீட்டை உடைச்சது, பச்சப்புள்ளைக்கும், பாட்டிக்கும் கூட சாவு பயத்தை காட்டுனதெல்லாம் அசம்பாவிதமே கிடையாது. அதெல்லாம் ச்சும்மாங்காட்டி லூலூலூலாயிக்கு நடந்த சம்பவங்க இல்ல!)

* நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், ஏழை விவசாயிகளின் கஷ்டம் தெரிந்தவன். ஆனால் ஸ்டாலினோ கஷ்டப்படாமல் ஏஸியில் வாழ்ந்தவர்: எடப்பாடி பழனிசாமி. (ஆமாங்க தலீவரே, ஏழை விவசாயிங்களோட கஷ்டத்தைப் புரிஞ்சுகிட்டுதான் எட்டுவழி சாலைக்காக ஏக்கர் ஏக்கரா விவசாய நிலத்தை வளைச்சீங்க, அதை தடுக்க வந்த விவசாயிகளை லத்தியை சுழட்டி விரட்டுனீங்க. இதுக்கெல்லாம் உங்க பக்கத்துல நிக்க முடியுமா ஸ்டாலினு?)

* ஆளுங்கட்சி கூட்டணியினர் கொடுக்கும் இருநூற்று ஐம்பது ரூபாய்க்கு ஒரு ஆட்டுக்குட்டி வாங்கி வளர்க்க முடியுமா? அட ஆட்டுக்கறி வாங்குறதுக்காவது பணம் கொடுக்க வேண்டாமா?: திருமாவளவன். (ஏம்ணே வாய வீணா கொடுத்து, வம்பை விலைக்கு வாங்கிக் கட்டுறீங்க? தேர்தல் முடிஞ்சுடுச்சுன்னு நினைக்காதீங்க...’திருமா வாக்களிக்க பணம் கேட்க மக்களை தூண்டினார்’னு ஒரு புகாரை கொடுத்து, நீங்க போட்டியிட்டதே செல்லாதுன்னு சொல்லிடுவாய்ங்க.)

* வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு வெளிப்படையாக சில காரணங்களைக் கூறினாலும், நிச்சயமாக ஏதோ ஒரு அரசியல் அழுத்தத்தின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் இம்முடிவை எடுத்துள்ளதோ எனும் ஐயம் எழுந்துள்ளது: தமிமுன் அன்சாரி. (யாருக்குமே தெரியாத இந்த ரகசியத்தை இம்புட்டு சுளுவா கண்டுபிடிச்ச நீங்களே, அந்த அழுத்தத்தை யாரு கொடுத்திருப்பாங்க?ன்னு கொஞ்சம் கண்டுபிடிச்சு சொல்லுங்க தமீ பிரதர்)

click me!