திரௌபதி முர்மு பாஜவிடம் சிக்கிய சர்க்கஸ் யானை.. குடியரசு தலைவர் வேட்பாளரை விமர்சித்த திருமாவளவன்

By Thanalakshmi V  |  First Published Jul 1, 2022, 3:42 PM IST

பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும் பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றது தான் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார் என்று எச்சரித்தார். 


விசிக கட்சி சார்ப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும் எம்.பியுமான  தொல்.திருமாவளவன் , ” ஆர்.எஸ்.எஸ் என்பது பயங்கரவாத இயக்கம் என்றும் அதன் முதல் எதிரி அரசியலமைப்பு சட்டம் தான் என்றும் அவர் கூறினார். மேலும் பிராமணர்களுக்கு நாடு இல்லை என்பதால் இந்தியாவை ஒரே தேசம் ஒரே கொள்கை என்று ஹிட்லரின் கொள்கையை பின்பற்றி கோஷம் இடுகின்றனர்.

Tap to resize

Latest Videos

சனாதன இயக்கமான ஆர்.எஸ்.எஸ், பெண்களை பிள்ளைகளை பெற்று போடும் இயந்திரமாகவும் ஆண்களுக்கு கட்டுபட்டு வாழ வேண்டும் என்றும் வழிநடத்துகிறது. எனவே இந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அழிக்கும் ஒரே ஆயுதம் அரசியலமைப்பு சட்டம் தான். அரசியலமைப்பு சட்டம்தான் சமூகத்திற்கு கல்வி, பெண்ணுரிமை, இட ஒதுக்கீடு, சமூக நீதி என அனைத்தும் கிடைத்தது  என்று அவர் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க:SP Velumani: எஸ்.பி வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு.. ஆப்பு வைத்த சென்னை உயர் நீதிமன்றம்.!

மேலும் பாஜகவில் இருக்கும் தலித்துகளான எல்.முருகனும், திரௌபதி முர்முவும்  பாகன் கையில் இருக்கும் கோயில் யானைகள், ஜோசியரிடம் உள்ள கூண்டுக்கிளிகள், சர்க்கஸ் புலிகள் போன்றுதான் செயல்பட முடியும் என்று கூறிய இவர், அவர்களால் என்ன சொல்கிறார்களோ அதைத்தான் செயல்படுத்துவார்கள் என்று தெரிவித்தார். 

ஆளும் மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு, பொதுத்துறை தனியார்மயம், ஜி.எஸ்.டி,  புதிய பென்சன் போன்ற திட்டங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். மேலும் இந்த அரசு ஒருபுறம் சனாதன பாதுகாப்பு என்றும் மறுபுறாம் கார்ப்பரேட்மயம் என்றும் செயல்படுகிறது. அதோடுமட்டுமல்லாமல், சனாதனிகளின் எடுபிடிகள், கார்ப்பரேட்டுகளின் செல்லப்பிள்ளைகளும் தான் மோடியும் அமித்ஷாவும் என்று எம்.பி திருமாவளவன் குற்றச்சாட்டினார். 

மேலும் படிக்க:ஒருபக்கம் வரி உயர்வு.. மற்பக்கம் விலைவாசி உயர்வு.. அய்யோ மோடி அரசு கொடுமை..! தலையில் அடித்து கதறும் சீமான்..

மேலும் அவர்கள் தலைமையிலான அமைச்சரவை கும்பல் சனாதானிகள், இந்து ராஷ்ட்ரயம் என்றும் கார்ப்பரேட்டுகள் தனியார் தேசம் என்று அறிவியுங்கள் என்கின்றனர். நாடு முழுவதும் உழைக்கும் மக்களை சீரழிக்கும் மது விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. பொதுத்துறையை தனியார்மயமாக்கிவிட்டு மதுவை மட்டுமே அரசாங்கம் விற்பது வயிறு எரிகிறது. மது குடித்தால் சாதிதான் தெரியும், அரசியல் தெரியாது.  டாஸ்மாக் இளைஞர்களின் மூளையை சிந்திக்க விடுவதில்லை என்று அவர் ஆதங்கப்பட்டார். 

பாஜகவின் நூபுர்சர்மா, நவின் ஷிண்டால் பேசியது ஆர்.எஸ்எஸ்சின் அரசியல்.  வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் இயக்கம் தான் ஆர்.எஸ்எஸ்.  இஸ்லாமியர்களை வம்பிழுக்க தான் இது போன்று தூண்டுதல்களை செயல்படுத்துகிறது. இந்துக்களே படிக்க வாருங்கள் என அழைப்பதில்லை. இஸ்லாமியர்களை பாருங்கள் என கூறி அழைக்கின்றனர் என்று அவர் குற்றச்சாட்டினார்.

மேலும் படிக்க:ஓபிஎஸ்-இபிஎஸ் நேருக்கு நேர் சந்திப்பு..??? நட்சத்திர ஓட்டலில் தடபுடல் ஏற்பாடு.. நாளை நடக்கப் போகும் டுவிஸ்ட்..

தமிழகத்தில் மாணவ செல்வங்களின் கைகளில் லேப்டாப் கொடுக்கிறோம். ஆனால் கர்நாடகாவில் காவி துண்டையும், ஜெய்ஸ்ரீராம் கோஷத்தையும் கொடுக்கின்றனர். 2024ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஒரு நாள் இரவில் மன்கீபாத்தில் பேசும் போது மனுஸ்ருதி தான் அரசியலமைப்பு சட்டம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார் என்று எச்சரித்த அவர், ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் அரசியல் ஒட்டுமொத்த தேசம் மற்றும் இந்துக்களுக்கு எதிரானது என்றும் பாஜக ஆட்சியில் இருந்தால் ஆணவப்படுகொலைகள் நடக்கும் என்றும் பேசினார். 

click me!