திருமாவளவனின் பெரியார் சம்பவம்..! இளையராஜாவையே மிஞ்சிட்டாரே..! தீயாய் பரவும் வீடியோ...

Published : Apr 19, 2022, 11:02 AM IST
திருமாவளவனின் பெரியார் சம்பவம்..! இளையராஜாவையே மிஞ்சிட்டாரே..! தீயாய் பரவும் வீடியோ...

சுருக்கம்

பிரதமர் மோடியை அம்பேத்கரோடு இசையமைப்பாளர் ஒப்பிட்டு கருத்து தெரிவித்து இருந்தார். இது பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு மற்றும் ஆதரவு குரல் எழுந்துள்ளது. இந்தநிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவை  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெரியாரோடு ஒப்பிட்டு பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா கருத்து

ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்றும்  சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.  முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும்  அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து இளையராஜா அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இதற்கு பல அரசியல் கட்சி தரப்பில் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தனது சொந்த கருத்தை திரும்ப பெறப்போவது இல்லையென இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார்.

இளையராஜா பாவம்

இந்தநிலையில் இசையமைப்பாளர்  இளையராஜா தொடர்பாக கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ, அவர்களைச் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் சந்திப்பார்கள். இப்படித் தான் ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைப்பதாக திருமாவளவன் தெரிவித்தார். மேலும் அம்பேத்கர் இருந்திருந்தால் நரேந்திர மோடியைப் பாராட்டி இருப்பார் என இளையராஜா சொல்லி இருக்கிறார். இளையராஜா போன்ற நபர்களைக் குறி வைப்பதே அவர்களின் நோக்கம். இளையராஜா பாவம்  அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புவதாக திருமாவளவன் கூறியிருந்தார். இந்தநிலையில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்காக  ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி எடுத்துள்ளார். அந்த வீடியோவில் பெரியாரோடு சத்குருவை ஒப்பிட்டு பேசியுள்ளார்.  தற்போது அந்த வீடியோ  சமூக வலை தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜக்கியும்- பெரியாரும்

அந்த வீடியோவில் திருமாவளவன், சத்குரு ஜக்கி வாசுதேவை பார்க்கும் போது சாமியார் போல் தெரிவதில்லை பெரியார் போல் தெரிகிறார். மேலும் பெரியார் ஜாதி இல்லை, மதம் இல்லை, கடவுள் இல்லை என்று கூறினார். இது போன்ற சூழலில்  சிக்கிக்கொண்டு மனிதர்கள் மனிதர்கள் மோதிக் கொள்ள வேண்டாம் பகை வேண்டாம் என்று பெரியார் கூறினார். அதையேதான் ஜக்கி சத்குருவும் தெரிவிப்பதாக திருமாவளவன் கூறுகிறார்.சத்குரு யாரையும் விமர்சிக்காமல் கருத்து கூறினார். ஆனால் பெரியார் நேரடியாக விமர்சித்து தனது கருத்தை தெரிவிப்பார். பெரியார்  எதிர்மறை அணுகுமுறை, நீங்கள் நேர்மறை அணுகுமுறை என தெரிவித்தார். இந்த வீடியோ காட்சிகள் பல வருடங்களுக்கு பிறகு தற்போது வைரலாகி வருகிறது. அம்பேத்கரோடு பிரதமர் மோடியை ஒப்பிட்டு பேசிய இளையராஜாவின் கருத்துக்கு எதிராக விமர்சனங்களுக்கு மத்தியில் சத்குருவை, பெரியாரோடு ஒப்பிட்டு பேசிய திருமாவளவனின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Rajini Speech: ரஜினிகாந்த் பேசியதால் பரபரப்பான 10 சம்பவங்கள்... இன்னும் மறக்காத தமிழகம்! ஒரு சுவாரஸ்யமான லிஸ்ட்.!
TASMAC Issue: "மதுவிலக்கு இல்லையா? அப்படின்னா குறைந்தபட்சம் தரமான சரக்காவது கொடுங்க!" – விஜய் அரசுக்கு மக்கள் வைக்கும் 7 கோரிக்கைகள்