என்னை காவு கொடுக்க முயன்ற ராமதாஸை கடைசிவரைக்கும் மறக்கமாட்டேன், மன்னிக்கமாட்டேன்... தீயாய் பாயும் திருமா! திகைத்துக் கிடக்கும் தைலாபுரம்

By Vishnu PriyaFirst Published Feb 6, 2019, 1:48 PM IST
Highlights

கடைசி வரை என்னால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டு ‘எல்லாம் நன்மைக்கே!’ எனும் முடிவோடு சென்று கொண்டிருக்கிறேன்.” என்று வெடித்துள்ளார். திருமாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெகுவாகா ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள்.

தமிழக அரசியலில் இன்றைய நிலவரப்படி இரண்டு கட்சிகளின் நிலைமை வெகு மோசமாக இருக்கிறது ஒன்று பா.ம.க., இரண்டாவது தே.மு.தி.க. ராமதாஸ், பிரேமலதா இரண்டு பேருமே தங்களை அ.தி.மு.க - பா.ம.க. கூட்டணியில் இணைத்துக் கொள்ள படாதாபாடு படுகின்றனர். 

ஆனால் பிரேமாவின் கண்டிஷன்களும், ராமதாஸின் சித்தாந்தங்களும் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. இரண்டு பேருக்குமே ஒத்துவரவில்லை. இதனால் இரு கட்சிகளும் கூட்டணியில் இணையும் வாய்ப்பு தொங்கலில்தான் உள்ளது. இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் இணையலாமா? என்று பா.ம.க. அலைபாய்வதாக ஒரு தகவல் கிளம்பியுள்ளது. 

‘ஸ்டாலினை முதல்வராக்குவோம்!’ என்பது மட்டுமே இந்த கூட்டணியில் ராமதாஸுக்கு ஒத்துவராத கோஷம், காரணம் மகன் அன்புமணி.  ஏற்கனவே சட்டமன்றத்தில் ஜீரோவாக இருக்கிறோம், நாடாளுமன்றத்திலும் அதே நிலைதான்...அப்படியே விட்டால் கட்சியே ஜீரோவாகிவிடும், பார்த்து முடிவு பண்ணுங்க டாக்டரய்யா! என்று ஜி.கே.மணி உள்ளிட்டோர் வைத்த கோரிக்கையின் விளைவே தி.மு.க. பக்கம் டாக்டரின் கண்கள் மேய துவங்கியுள்ளன என்கிறார்கள்.

   

இந்நிலையில் ஸ்டாலினின் அணியில் ஏற்கனவே திருமாவளவன் பசையாக ஒட்டிக் கொண்டிருக்கிறார். அடிப்படையில் திருமாவுக்கும், ராமதாஸுக்கும் ஆகவே ஆகாது. ஒருகாலத்தில் அப்பா - மகன் போல இருந்தவர்கள் சமீப காலமாக எதிரெதிராய் சீறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இருவரும் ஒரே அணியில் எப்படி சாத்தியம்? என்பதே விவகாரம். 

இப்படியான பரபரப்பின் இடையே....’தி.மு.க. அணியில் பா.ம.க. இணையும் என பேச்சு இருக்கிறதே?’ என்று திருமாவிடம் கேட்க, அவரோ வெளிப்படையாக போட்டுடைத்திருக்கிறார் இப்படி...”இது வெறும் வதந்திதான். எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தவும், கோபம் வருவது போல் பேசினால் சிறுத்தைகள் உணர்ச்சி வசப்பட்டு வெளியேறுவார்கள் என்ற எண்ணத்திலும் இப்படி திட்டமிட்டு பரப்புகின்றனர். தி.மு.க. அணியில் பா.ம.க.வுக்கு வாய்ப்பு இருக்காது என்று நிச்சயமாக நம்புகிறேன். 

ராமதாஸுடன் இணைந்து செய்லபட முடியாதா? என்று கேட்கிறார்கள். அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்தேன். ஆனால் வெறும் அரசியலுக்காக திடீரென என் மீது அபாண்ட பழிகளை சுமத்தினார், எல்லா சமுதாயத்தினரையும் எனக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் இறங்கினார். எல்லாவற்றையும் விட உக்கிரமாக, அவரது ஜாதி அரசியலில் என்னை காவு கொடுக்கப் பார்த்தார். பலிகடாவாக என்னை மாற்ற முயற்சித்தார். இதனால் எங்களுக்குள் விரிசல் விழுந்தது. 

இதையெல்லாம் கடைசி வரை என்னால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. ஆனாலும் மனதை தேற்றிக் கொண்டு ‘எல்லாம் நன்மைக்கே!’ எனும் முடிவோடு சென்று கொண்டிருக்கிறேன்.” என்று வெடித்துள்ளார். திருமாவின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெகுவாகா ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் விடுதலை சிறுத்தைகள். கிழக்கு கடற்கரை சாலை வழிகளில் போலீஸ் கண் வைக்க வேண்டியது அவசியமாகிறது!

click me!