வைகோ சொன்ன அந்த ஒரு வார்த்தை ... மனம் நொந்து புழுங்கும் திருமா! வெறிகொண்டு திரியும் சிறுத்தைகள்...

By sathish kFirst Published Dec 6, 2018, 6:12 PM IST
Highlights

செய்த உதவியை சொல்லிக் காட்டிவிட்டார் வைகோ என்று விடுதலைச் சிறுத்தைகள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்னை கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று திருமாவளவன்  மனசை தேத்திக்கொண்டுள்ளார்.

கடந்தவாரம்  தனியார் தொலைக்காட்சியில் நேர்காணல் அளித்தார் வைகோ. அப்போது தலித்துகளை திராவிடம் எந்த நிலையில் வைத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தபோதே பேட்டி முடியும் தருவாயில் தானாகவே அந்த பேட்டியை முடித்துக் கொண்டு எழுந்தார் வைகோ.

இதுபற்றி விடுதலைச் சிறுத்தை வன்னியரசு தனது ஃபேஸ்புக்கில் , நான் பெரிதும் நேசிக்க கூடிய தலைவர் அவர். அவர் இப்படி பேசியிருக்கக்கூடாது. நியாயமான கேள்வியை முன்வைத்தார்கள். அதற்கு மிக சிறப்பாக, பொறுப்பாக நிறைய பதில் அளித்திருக்கலாம், எங்கள் வீட்டில் வேலை பார்க்கிறவர்கள் தலித்துகள் தான்.

மேலும், தலித்துகள் அதிகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினாலே அதற்கு பதில் சொல்லக்கூட மறுப்பது எந்தவிதமான பார்வை? எங்கள் வீட்டில் தலித்துகள் வேலை பார்க்கிறார்கள் என்று சொல்லுவதற்கும் அதிகாரப்பகிர்வுக்கும் ஏதாவது ‘சம்மந்தம்’ இருக்கிறதா? அதிலும் கோபமோ பதற்றமோ அடைந்தால் சந்தேகம் தான் கூடுதலாக எழும் என முடித்திருப்பது வைகோவை செம்ம கடுப்பில் ஆழ்த்தியதால் “திருமாவளவனை 2006 சட்டமன்றத் தேர்தலின் போது என் வீட்டுக்கு அழைத்து 30 லட்சம் கொடுத்தேன், பின் 20 லட்சம் கொடுத்தேன்” என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் வைகோ.

மேலும்,  ஒரு நிகழ்வில் இதுகுறித்து பேசிய வைகோ, “திருமாவளவன் இந்த நாட்டில் வளர்ந்து வருகிற நல்ல தலைவர் என்று தமிழ்நாடு முழுதும் சென்று பேசினேனே... வன்னியரசுவோ தலித்துகளை திராவிடம் உயர்த்தவில்லை என்று எழுதியிருக்கிறார். வன்னியரசு, இதை நீங்களாக எழுதவில்லை. இதை எழுத உங்களுக்கு உத்தரவிட்டது யார்? அரசியல் பண்பாடோட வளந்தவன்யா நான். எனக்கு சாதியெல்லாம் தெரியாது. நான் பெரியாரின், அம்பேத்காரின் வாரிசு” என்று பேசி வன்னியரசுவுக்குப் பின்னால் திருமாவளவன் தான் இருக்கிறார் என்று மறைமுகமாக அவரைத் தாக்கினார் வைகோ.

இதற்கு திருமாவளவனும் பதில் சொல்ல இப்பிரச்னை மேலும் பெரிதாகியிருக்கிறது. “முகநூலில் அண்ணன் வைகோ அவர்கள் பற்றி வன்னியரசு பதிவு செய்த கருத்து கட்சியின் கருத்தல்ல என்பதை நான் வன்னியரசுவிடம் சுட்டிக் காட்டி அதை நீக்கும்படி கேட்டுக்கொண்டேன். அவரும் வருத்தம் தெரிவித்து நீக்கிவிட்டார். வைகோவின் உதவியாளருக்கும் தொலைபேசி செய்து வருத்தம் தெரிவித்தார். அதன் பின் அண்ணன் வைகோ சொல்லியிருக்கிற கருத்து அதோடு தொடர்புடையதாக தெரியவில்லை.

2006 சட்டமன்றத் தேர்தலில் தன் இல்லத்துக்கு என்ன அழைத்தார். உபசரித்தார்,  தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவி செய்தார். அதற்கு நான் பல முறை நன்றி சொல்லியிருக்கிறேன். ஆனால் வன்னியரசு கருத்துக்கு இது பதிலா? என் மீது கோபமா? வன்னியரசு மீது கோபமா? நான் யாரையும் தூண்டிவிட்டு கருத்து சொல்கிற அற்பப் பிறவி அல்ல திருமாவளவன்” என்று பதில் சொல்லியிருக்கிறார்.

செய்த உதவியை சொல்லிக் காட்டிவிட்டார் வைகோ என்று விடுதலைச் சிறுத்தைகள் கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இந்த பிரச்னை கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று திருமாவளவன்  மனசை தேத்திக்கொண்டுள்ளார். ஆனால் சிறுத்தைகளோ வைகோ இப்படி காய் காசு கொடுத்ததை சொல்லிக் காட்டிட்டாரே  சினம்  கொண்டுள்ளதாக தெரிகிறது.

click me!