திருமாவின் கனவை நிறைவேற்றும் ஆளுனர் பன்வாரிலால் புரோகித்... ஸ்டாலின், வைகோ அதிர்ச்சி...

By Selvanayagam PFirst Published Aug 12, 2019, 8:09 AM IST
Highlights

விடுதலை சிறுத்தைகள் கட்சித்  தலைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் வரும் 22ஆம் தேதி டாக்டர் பட்டம் வழங்குகிறார்  

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அரசியல் இயக்கம் தொடங்கி தமிழக அரசியலில் சுமார் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் கட்சி தலைவராக வெற்றி கண்டுள்ளார் திருமாவளவன்.  

தமிழக அரசியலில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக திருமாவளவன் உருவெடுத்துள்ளார் என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது 

என்னதான்  மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவராக உயர்ந்தாலும் "டாக்டர் திருமாவளவன் "ஆக தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பது  திருமாவளவனின் நீண்டநாள்  ஆசை, 

எனவே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நேரத்தை செலவிட்டு, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் ஆய்வு மாணவராக தன்னை இணைத்துக் கொண்ட திருமாவளவன். தமிழகத்தில் உள்ள சாதி படிநிலைகள் குறித்தும், சாதி சமூகத்தில் எப்படி கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டு அதில் தேர்ச்சியும் பெற்று  தொல்.திருமாவளவன் டாக்டர், தொல் திருமாவளவனாக  அந்தஸ்து பெற்றார். 

பலர் டாக்டர் பட்டங்களை தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி பெற்று வரும் நிலையில் இரண்டு மூன்று ஆண்டுகளாக நேரத்தை செலவழித்து கடின உழைப்பின் மூலம் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர் திருமாவளவன் என அனைத்து தரப்பினரின் பாராட்டுப் பெற்றார். 

இந்நிலையில்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்  கடந்த ஆண்டு முனைவர் பட்டத்திற்கு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வரும் 22ஆம் தேதி மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில்  பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது 

அதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகின்றார்  அந்த வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்  திருமாவளவன்  அவர்களுக்கான டாக்டர் பட்டத்தையும் அவர் வழங்க உள்ளார்.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது , தமிழக ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் அவர்களை அரசியல் ரீதியாக மிகக் கடுமையாக திருமாவளவன் கடுமையாக தாக்கிப் பேசி வரும் நிலையில்  ,ஆளுநதின் கையாலேயே தனக்கான டாக்டர் பட்டத்தை பெற  உள்ளார் என்பது
பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை மத்தியில் மட்டுமல்லாது தமிழக அரசியலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!