திருமா பேசுனதுல தப்பே இல்லை! இவ்ளோ பேசுறாங்களே, சிவலிங்கம் சொல்லும் குறியீடு என்ன?: அடங்க மறுக்கும் விடுதலை சிறுத்தைகள்

By Vishnu PriyaFirst Published Nov 22, 2019, 6:27 PM IST
Highlights

தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்து கோயில்களில் அசிங்கமான சிற்பங்கள் இருப்பது நிஜம்தானே! இந்த சிவலிங்கம் இருக்கிறதே! அது என்ன குறியீடு என்று வெளிப்படையாகக் கூற முடியுமா? தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். 

ஒரு வரி, ஓஹோன்னு இம்சை!...என்ற பஞ்ச் டயலாக்குக்கு பக்காவாக பொருந்திப் போயிருக்கிறார் திருமாவளவன். சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த விடுதலை சிறுத்தைகளின் மகளிர் அணி கூட்டத்தில், இந்துக்களின் மனம் நோகும்படி ‘கூம்பு வடிவிலிருந்தால் மசூதி, உயரமாக இருந்தால் அது தேவாலயம். அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது கோயில்’ எனும் ஒரு தத்துவத்தை உதிர்த்தார் திருமா. இந்துக்களை இழிவுபடுத்தியுள்ளார் திருமாவளவன்! இதுவே அவருக்கு வாடிக்கையாகி இருக்கிறது! சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை பெறுவதற்காக இந்துக்களை அசிங்கப்படுத்துகிறார்! சிதம்பரம் தொகுதியில் தேர்தலில் நிற்கையில் ஆபாசமான சிற்பங்களை உடைய கோயிலை வணங்கும் இந்துக்களின் ஓட்டுக்களை வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டிதானே? பிரசார்த்தின் போது ஆபாச சிலைகள் உடைய இந்து கோயிலினுள் சென்று, விபூதி பூசியபடி ஓட்டுக் கேட்டது ஏன்? இந்துக்களின் ஓட்டு ஆபாசமாக இல்லையா! என்றெல்லாம் திருமாவுக்கு எதிராக எதிர்வினை ஆற்றிட துவங்கியுள்ளனர் மிக முக்கிய மனிதர்களும், சாமான்ய இந்துக்களும். 


இந்த நிலையில் தனக்கு எதிராக கருத்துக்கள் வலுக்கும் நிலையில், திருமாவும் தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, ‘உரை வீச்சின் போக்கில் தெறித்த சொற்கள் அவை’ என்று முட்டுக் கொடுத்துவிட்டார். ஆனாலும் அவருக்கு எதிரான விமர்சனங்களும், கொந்தளிப்புகளும் தொடர்கின்றன.இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான வன்னியரசுவோ “இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு தலைவர் ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். எனவே தொடர்ந்து அவரை விமர்சிப்பது அபத்தம். இருந்தாலும், இந்த நிலையில் எனது சொந்தக் கருத்தை சொல்கிறேன். 

அதாவது, தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை. இந்து கோயில்களில் அசிங்கமான சிற்பங்கள் இருப்பது நிஜம்தானே! இந்த சிவலிங்கம் இருக்கிறதே! அது என்ன குறியீடு என்று வெளிப்படையாகக் கூற முடியுமா? தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதை நாங்கள் ஏற்கிறோம். அவை காதல் ரசத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் கோயில்களில் இருக்கும் ஆபாச சிற்பங்கள் முகம் சுளிக்க வைப்பதாகத்தான் உள்ளது. அந்தப் படங்களை போட்டோ பிடித்து பெண்களுக்கு அனுப்பினால், நிச்சயம் போலீஸில்தான் புகார் கொடுப்பார்கள்.” என்று கூறியுள்ளார். 
ஆக எவ்வளவோ எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையிலும், தங்களின் சித்தாந்தமான, அடக்குமுறைக்கு எதிராக அடங்க மறுத்து, அத்து மீறி, (கருத்துக்களால்) திருப்பி அடிக்கிறது வி.சி.க. 

click me!