"அதிமுக அணிகளை மட்டும் மோடி சந்திப்பது ஏன்?" - விளாசித் தள்ளிய திருமா

Asianet News Tamil  
Published : May 27, 2017, 09:22 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
"அதிமுக அணிகளை மட்டும் மோடி சந்திப்பது ஏன்?" - விளாசித் தள்ளிய திருமா

சுருக்கம்

thiruma questions why modi meeting only admk members

பாகுபாடு இல்லாமல், தமிழக அரசையும் மத்திய அரசையும் சரமாரியாக விமர்சித்து வருகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்.

தமிழக அரசியல் ஸ்திரத்தன்மையற்று காணப்படும் நிலையில், ஆட்சி நிர்வாகத்தை பா.ஜ.க. பின்னாள் இருந்து இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இப்பிரச்சனையை தற்போது கையில் எடுத்துள்ள தொல்.திருமா, பிரதமர் மோடிக்கு காட்டமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுங்கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி தமிழக அரசை மத்திய அரசு இயக்குவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். 

தமிழக நலன் மீது மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்று சாடிய தொல்.திருமாவளவன், எதிர்க்கட்சிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர், அதிமுக அணிகளை மட்டும் சந்திப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வரும் தொல்.திருமாவளவன், பிரதமர் மோடி மீது வைத்துள்ள இக்குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

மதுரையின் விஸ்வரூபம்..!சர்வதேச அந்தஸ்து வழங்கிய மத்திய அரசு - இபிஎஸ் வரவேற்பு..!
அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!