
மக்களின் முதல்வர், எளிமையின் சிகரம் என்று வடஇந்திய மீடியாக்களால் ஹைப் ஏற்றப்பட்டவர் உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத். உ.பி.யில் கட்சியால் வளர்ந்தவர், கட்சியை வளர்த்தவர்.
சாமியாரான இவர் மீது அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள். சிறுபாண்மையினத்தவர்கள் மீது இவர் முன்வைத்தாதகக் கூறப்படும் விமர்சனங்கள் அனைத்தும் பகீர் ரகம்.
இருப்பினும் இவருக்கு உத்திரப்பிரதேச முதல் அமைச்சர் பதவியை வழங்கி அழகு பார்த்தது பா.ஜ.க.ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தடாலடியாக உத்தரவுகளைப் பிறப்பித்து, அதிரடியாக சோதனையில் ஈடுபடுவது என இவரது ஆக்ஷன் ஸ்டைலைப் பார்த்து அசந்து போன ஊடகங்கள், யோகியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளின.
பெண்களை கிண்டல் செய்யும் ரோமியோக்களுக்கு நூதன முறையில் தண்டனை அளித்தது, புகையிலை பயன்படுத்தும் காவல்துறையினரை கடுமையாக எச்சரித்தது என இவரின் சில நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால் சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி கொடுப்பதில்லை என்ற சொல்லாடல் இவருக்கும் பொருந்தியுள்ளது. தன் உடனிருப்பவர்களால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்.
அண்மையில் தீவிரவாதிகளுடனான சண்டையில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரரின் வீட்டுக்கு ஆதித்யநாத் சென்றிருந்தார். இதற்காக அந்த வீரரின் வீடு முற்றாக மாற்றியமைக்கப்பட்டது. தரைவிரிப்பான், ஏ.சி. என சகல வசதிகளும் செய்யப்பட்டன.
இதனைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர் அந்த வீரரின் குடும்பத்தினர். ஆனால் அந்த சந்தோஷம் 1 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. ஆதித்யநாத் சென்ற மறுகணமே தரைவிரிப்பானும், ஏசியும் கழட்டிச் சென்று விட்டனர்.
இதே போன்றதொரு சர்ச்சையில் மீண்டும் சிக்கியுள்ளார் ஆதித்யநாத்.
உத்திரப்பிரதேசத்தில் முஷார் என்ற தலித் இன மக்களை முதல்வர் சந்திப்பதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த இன மக்கள் வசிக்கும் பகுதிக்குச் சென்ற அதிகாரிகள், தாழ்த்தப்பட்டவர்களிடம் சோப்பு, ஷேம்பு உள்ளிட்டவைகளை அளித்து குளித்தால் மட்டுமே, ஆதித்யநாத்தை காண முடியும் என்று கட்டாயப்படுத்தி உள்ளனர்.
உலகை ஆண்ட மாமனிதர்கள் பலரும், உடனிருந்தவர்களால் சறுக்கலை சந்தித்தனர் என்பதை மக்களின் முதல்வர், எளிமையின் சிகரம் யோகி ஆதித்யநாத் புரிந்து கொண்டால் சரி