
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 3 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் ஆணையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று விசாரணை ஆணையம் ஏற்கெனவே அழைப்பு விடுத்திருந்தது.
மேலும் ஜெயலலிதா உடன் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி ஒவ்வொருவரையாக அழைத்து விசாரணை ஆணையம் விசாரித்து வருகின்றது.
அந்த வகையில் இன்று ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக கூறப்பட்ட மருத்துவர் பாலாஜி 3 முறையாக ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 3 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சமையலர் ராஜம்மாள், ஓட்டுநர் ஐயப்பன், முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
வரும் 20-ம் தேதி ஜெயலலிதாவின் சமையலர் ராஜம்மாள், 21-ல் மனோஜ் பாண்டியன், 23-ல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் ஐயப்பன் ஆஜராகுமாறு சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.