தமிழகத்தில் மின்தடையே இருக்காது.. பராமரிப்பு பணிகள் மட்டும்தான்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி சரவெடி.

By Ezhilarasan BabuFirst Published Jun 29, 2021, 11:15 AM IST
Highlights

இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். 4 லட்சத்து 23 ஆயிரம் விவாசாயிகள் மின் இணைப்பிற்காக பதிவு செய்து காத்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சென்னை வடக்கு மண்டல் சார்பாக மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரியத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி,  எபினேசர், ஜோசப் சாமுவேல், தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் சென்னை வடக்கு மண்டல அதிகாரிகள், மின்வாரிய பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தாமல் உள்ள மின்திட்டங்கள் மீண்டும் செயல்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் முடிந்துள்ளது, சில இடங்களில் பெரிய அளவில் பணிகள் உள்ளது,  இனி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் . மேலும், மின் தடை புகார்களை பொத்தாம் பொதுவாக தெரிவிக்காமல்  மின் இணைப்பு எண் மற்றும் மின் தடை ஏற்பட்ட பகுதிகளோடு தெரிவித்தால் உடனடியாக மின் இணைப்பு சரி செய்யப்படும். கொரோனா தாக்கம் காரணமாக வீடு வாரியாக கணக்கெடுக்கும் பணிகள்  நிறுத்தப்பட்டது. 3 முறைகளில் மின் கட்டணம் செலுத்த வாய்ப்பளிக்கப்பட்டது அதில் 11 லட்சத்திற்கும் மேற்ப்பட்டோர் அந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மின் கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 

மின் கட்டணம் அதிகமாக உள்ளதாக புகார்கள் வந்தால் துறையின் சார்பில் ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்வு மேற்கொண்டு மின் கணக்கீட்டில் தவறுகள் ஏற்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். 4 லட்சத்து 23 ஆயிரம் விவாசாயிகள் மின் இணைப்பிற்காக பதிவு செய்து காத்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் மின் இணைப்பிற்கால காத்துகொண்டிருக்கும் போது தமிழகம் எப்படி மின் மிகை மாநிலமாக இருக்கும் என கேள்வியெழுப்பிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதையும் கொண்டுவரப்படவில்லை என தெரிவித்தார். 

 

click me!