கவலைபடாதீங்க.. எல்.கே.ஜி. யூ.கே.ஜிக்கு லீவு தான்..! முதல்வர் அதிரடி..!

Published : Mar 14, 2020, 06:03 PM ISTUpdated : Mar 14, 2020, 06:05 PM IST
கவலைபடாதீங்க.. எல்.கே.ஜி. யூ.கே.ஜிக்கு லீவு தான்..! முதல்வர் அதிரடி..!

சுருக்கம்

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு அறிவித்தபடி விடுமுறை 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை அளிக்கபடும் என்றார். இதுகுறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது.  இந்த வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் மட்டும் பலி எண்ணிக்கை தாறுமாறாக அதிகரித்துள்ளது. தற்போது 3,177 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் இத்தாலி, ஈரான், தைவான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா, இந்தியா என 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி இருப்பதால் உலக நாடுகள் பீதி அடைந்துள்ளன.

இந்தியாவிலும் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கொரொனா பாதிற்பிற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தின் மழழையர் பள்ளிகள் மற்றும் கேரளா மாநில எல்லையோரம் உள்ள மாவட்டங்களில் செயல்படும் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து அரசு நேற்று உத்தரவிட்டது.

திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!


பின் இன்று காலையில் அந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களுக்காக விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கபட்டது. இது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு அறிவித்தபடி விடுமுறை 16ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை அளிக்கபடும் என்றார். இதுகுறித்த முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!