ஊரடங்கு என்கிற பேச்சே இருக்கக்கூடாது... மத்திய - மாநில அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!

Published : Apr 15, 2021, 04:51 PM IST
ஊரடங்கு என்கிற பேச்சே இருக்கக்கூடாது... மத்திய - மாநில அரசுக்கு கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!

சுருக்கம்

மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சை மத்திய, மாநில அரசுகள் எடுக்க கூடாது. அதற்கு பதிலாக கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் தேவையோ அதனை மேற்கொள்ள வேண்டும்

முகக் கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிப்பதற்கு பதிலாக முகக் கவசங்களை இலவசமாக வழங்கி மக்களுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து அறிவுரை வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். 

இது குறித்து கோவையில் பேசிய அவர், ’’இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இது மனவருத்தத்தை அளிக்கிறது. வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசியல் கட்சியினர் சார்பில் மாவட்ட, மாநில அளவில் தனியாக ஒரு குழுவை அமைக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கின்றனர். அதற்கு பதிலாக முக கவசங்களை இலவசமாக வழங்கி மக்களுக்கு கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து எடுத்து கூறி அவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

கடந்த முறை போடப்பட்ட ஊரடங்கில் இருந்து தற்போதுதான் வியாபாரிகள், வணிக நிறுவனங்கள் மெல்ல, மெல்ல மீண்டு வருகின்றன. அதற்குள்ளாகவே மீண்டும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து விட்டது. இதனால் எங்கு ஊரடங்கு போடப்பட்டு விடுமோ என வியாபாரிகளும், வணிக நிறுவனங்களும் அச்சத்தில் உள்ளனர். அப்படி எதுவும் செய்யக்கூடாது. வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே மீண்டும் ஊரடங்கு என்ற பேச்சை மத்திய, மாநில அரசுகள் எடுக்க கூடாது. அதற்கு பதிலாக கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் தேவையோ அதனை மேற்கொள்ள வேண்டும்’’ என அவர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!