ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும்.. அமெரிக்காவுக்கே அறிவுரை சொன்ன மோடி.

By Ezhilarasan BabuFirst Published Jan 7, 2021, 11:12 AM IST
Highlights

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்ற  கட்டிடத்தை முற்றுகையிட்டதால், வாஷிங்டன் டிசியில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்தியைக் கண்டு மனமுடைந்து போய் உள்ளதாகவும், 

ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்றத்தை  முற்றுகையிட்டதன் மூலம் வாஷிங்டன் டிசியில் கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்தி கண்டு மனம் வருந்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்  ஜோ பைடன் வெற்றிபெற்றார். துணை அதிபராக கமலா ஹரிசன் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் நிகழ்ச்சி நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது. தேர்தல் சபை வாக்குகள் ஆதரவுடன் சான்றிதழ் வழங்குவதற்காக துணை அதிபர் மை பென்ஸ் தலைமையில் எம்பிக்கள் கூட்டம் தொடங்கியது. அப்போது ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென ஆயிரக்கணக்கில் அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் அவர்கள் பாராளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். இதனால் அதனை தடுக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், அதில் ஒரு பெண் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் வன்முறையாக மாறியது. பின்னர் ஏராளமான பாதுகாப்பு படையினர்  அங்கு குவிக்கப்பட்டு அக் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற  வன்முறைக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இந்திய பிரதமர் மோடி,  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன்  உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க பாராளுமன்ற  கட்டிடத்தை முற்றுகையிட்டதால், வாஷிங்டன் டிசியில் ஏற்பட்ட கலவரம் மற்றும் வன்முறை பற்றிய செய்தியைக் கண்டு மனமுடைந்து போய் உள்ளதாகவும்,  ஒழுங்கான மற்றும் அமைதியான அதிகார பரிமாற்றம் தொடரவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார் மேலும் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.  

 

click me!