ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒண்ணு இருக்கு... அது சசிகலாவுக்கு மட்டும் தான் தெரியும்... ஓ.பி.எஸ் ஆதரவாளர் பகீர்..!

By Thiraviaraj RMFirst Published Jun 19, 2021, 4:08 PM IST
Highlights

உள்ளது. சசிகலா கட்சியை கைப்பற்ற முயன்று வருவதாக கூறப்படும் நிலையில் அதனை திசை திருப்பவே நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மரணம் குறித்த பேச்சை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

ஜெயலலிதாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய அமைச்சராக இருந்தனர் நத்தம் விஸ்வநாதன். அதிமுகவின் ஐவர் அணியில் ஒருவராக உயர்ந்தார். அப்போது சீனிவாசன் அணி என்பதே இல்லை என்கிற நிலைதான் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தது. 2016 சட்டசபை தேர்தலின்போது நத்தம் விஸ்வநாதன் கட்டி வைத்த கோட்டையை தரைமட்டமாக்கிவிட்டார் ஜெயலலிதா. அவர் வெற்றி பெறவே முடியாது என தெரிந்தும் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட வைத்தார். நத்தம் விஸ்வநாதனும் தோற்று போனார்.

அந்த தேர்தல் முடிவுடன் நத்தம் விஸ்வநாதனின் சகாப்தத்துக்கு ஜெயலலிதா முடிவுரை எழுதிவிட்டதாகவே கருதப்பட்டது. கடுமையாக போராடிய நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் வென்ற சீனிவாசனுக்கு வனத்துறை அமைச்சர் பதவி கிடைத்தது. இதனையடுத்து சீனிவாசன் தமது ஆதரவை மீண்டும் பலப்படுத்தினார். இந்த முறை சீனிவாசனுக்கு மகன்கள் பக்க பலமாக இருந்தனர். அதேபோல் மாவட்ட செயலாளர் மருதராஜும் சீனிவாசனுக்கு ஆதரவாக இருந்தார். 

இதனால் திண்டுக்கல் அதிமுக என்றாலே சீனிவாசன்தான் என்கிற அசைக்கவே முடியாத அஸ்திவாரம் போடப்பட்டது. அப்போது வேறுவழியே இல்லாமல் ஓபிஎஸ் தொடங்கிய தர்மயுத்தத்தில் தம்மை நத்தம் விஸ்வநாதன் இணைத்துக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். உச்சகட்டமாக நத்தம் விஸ்வநாதனின் பிறந்த நாளுக்கு ஒரே ஒரு போஸ்டர்தான் திண்டுக்கல்லில் ஒட்ட முடியும் என்கிற நிலைமை கூட வந்தது. அதிமுக அணிகள் இணைந்தபோதும் கூட நத்தம் விஸ்வநாதன் அணியால் மீண்டும் தலைதூக்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில்தான் அதிமுகவில் மாவட்டங்கள் பிரிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு குழு அமைக்கப்பட்டது.

தற்போது நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, பழனி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகிவிட்டார் நத்தம் விஸ்வநாதன். திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரானார் திண்டுக்கல் சீனிவாசன். இதனையடுத்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களில் அமைதியாக இருந்த நத்தம் விஸ்வநாதனின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்தும் சசிகலா குறித்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், ‘’ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது; அது பற்றி தெரியாததால் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜாரவில்லை’’என அவர் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா கட்சியை கைப்பற்ற முயன்று வருவதாக கூறப்படும் நிலையில் அதனை திசை திருப்பவே நத்தம் விஸ்வநாதன், ஜெயலலிதா மரணம் குறித்த பேச்சை ஆரம்பித்துள்ளார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். 
 

click me!