இஸ்லாமிய நாடுகளில்கூட இந்த அளவுக்கு கொடுமைகள் இல்லை.. ஆனால் இந்தியாவில் இருந்தது.. ஜெ.பி நட்டா ஆவேசம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 1, 2021, 12:54 PM IST
Highlights

அதாவது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி முத்தலாக்குக்கு  எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக உருவெடுத்தது.  

உலக அளவில் இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், சிரியா போன்ற நாடுகளில் கூட இல்லாத முத்தலாக் என்ற கொடுமை  இந்தியாவில் இருந்தது. அதை பிரதமர் நரேந்திர மோடி ஒழித்துக் கட்டினார் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா பெருமிதம் தெரிவித்துள்ளார். வாரணாசியில் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். முத்தலாக் சட்டம் மிகப்பெரிய சீர்திருத்தம் எனவும் அது மிகவும் சிறப்பான பலனை அளித்துள்ளது எனவும் நட்டா கூறியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆத் தேதி, இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் சிறப்புமிக்கது ஒரு நாளாகும். 

அதாவது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி முத்தலாக்குக்கு  எதிரான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக உருவெடுத்தது. இச்சட்டத்திற்கு இஸ்லாமிய பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் முத்தலாக் எனக்கூறி பெண்களை விவாகரத்து செய்யும் கொடுமை இஸ்லாமிய சமூகத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இதுவே பாஜக அரசின் சாதனைகளில் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. இந்நிலையில் வாரணாசியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா, முத்தலாக் சட்டத்தை  மேற்கோள்காட்டி உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், மோடி அரசால் முத்தலாக் முறை  ஒழிக்கப்பட்டது, இது அரசாங்கத்தின் சாதனைகளில் மிக முக்கியமான ஒன்று, அதாவது இஸ்லாமிய நாடுகளான ஈரான், ஈராக், சிரியாவில் கூட முத்தலாக் என்ற கொடுமை இல்லை, ஆனால் முத்தலாக் இந்தியாவில் இருந்தது. முற்போக்காளர்கள் என்று கூறும் நமக்கிடையில் தான் அந்த சட்டம் இருந்தது. ஆனால் அதை அடியோடு பிரதமர் மோடி ஒழித்தார். அது நாட்டில் நடந்த மிகப்பெரிய சீர்திருத்தம். அந்த அநீதி மோடியால் முடிவுக்கு வந்தது. அதனால்தான் நாம் சொல்லிக்கொள்ளலாம் நாம் முற்போக்காளர்கள் என்று.  இவ்வாறு அவர் கூறினார்.  பாஜகவுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பிராந்தி அலுவலகத்தை வாரணாசியில் ஜேபி நட்டா திறந்து  வைத்தார், அப்போது அவருடன் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.  

 

click me!