“எந்த எதிர்ப்பும் இல்லை... அனைத்து எம்எல்ஏக்களும் என் பக்கம்தான் உள்ளனர்...” - டிடிவி.தினகரன்

Asianet News Tamil  
Published : Apr 19, 2017, 09:58 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
“எந்த எதிர்ப்பும் இல்லை... அனைத்து எம்எல்ஏக்களும் என் பக்கம்தான் உள்ளனர்...” - டிடிவி.தினகரன்

சுருக்கம்

there is no opposition for me says dinakaran

அன்னிய செலாவணி வழக்கில் இன்று டிடிவி.தினகரன், சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஆஜராவதற்காக, பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “தற்போது கட்சியில் பிளவு என்பது இல்லை. எனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனைத்து எம்எல்ஏக்களும் எங்களுடன் உள்ளனர். கட்சியில் எந்த எதிர்ப்பும் இல்லை” என்றார்.

இன்று மாலை அனைத்து எம்எல்ஏக்கள் ஆதரவு தனக்கு உள்ளதாகவும், இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது உள்ள 24 அமைச்சர்களில் 22 பேர், மாவட்ட செயலாளர்களாக உள்ளனர். மொத்தம் உள்ள 50 மாவட்டத்தில், ஒரு சிலரே உள்ளனர். குறிப்பாக பெரும்பாலான எம்எல்ஏக்கள் அமைச்சர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து, பதவியேற்க செய்தனர். அவர்கள் யாரும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள் என அமைச்சர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில் தென் தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் சென்னை பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான வெற்றிவேல் உள்பட 8 பேர் மட்டும் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால், டிடிவி.தினகரனுக்கு ஆதரவு கிடைக்குமா அல்லது அரசியல் மற்றும் கட்சியில் இருந்து ஒதுக்கப்படுவாரா என்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!
கொங்குவை தொடர்ந்து 'டெல்டா' பெண்களின் வாக்குகளுக்கு குறி.. திமுகவின் அடுத்த மாஸ்டர் பிளான்!