
ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டதில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை எனவும் எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் எனவும் டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. ஓராண்டாக ஜெ மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. இதனால் ஜெ.மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓராண்டிற்கு பிறகு தற்போது டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று ஜெ சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து வேற்றிவேல் மீது வழக்கு பதிய தேர்தல் அதிகாரி பிரவீன் நாயருக்கு தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்காணி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஜெ.சிகிச்சை குறித்த வீடியோ வெளியிட்டதில் எந்த தேர்தல் விதிமீறலும் இல்லை எனவும் எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார் எனவும் தெரிவித்தார்.
உண்மையை சொன்னா குத்தம் சொல்வீங்களா எனவும் துரோக கும்பலான ஒபிஎஸ் இபிஎஸ்க்கு பாடம் கற்பிக்கவே வீடியோவை வெளியிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.
சுயேட்சையை எதிர்க்க பயந்துகொண்டு ரூ. 150 கோடி செலவு செய்துள்ளனர் எனவும் ஒபிஎஸ் இபிஎஸ் பொய் பிரச்சாரத்திற்கு முடிவு கட்டியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
படத்தை பார்த்தவுடன் கண்ணீர் விட்டேன் எனவும் கோடிக்கணக்கான மக்கள் சந்தோசமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்தார்.