
சசிகலா குறித்து அவதூறாக பேசும்போதே ஜெ. வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம் அதற்கு சசிகலா மறுத்து விட்டார் என்றும், மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாகவும் தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதா மரணம் குறித்தே முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பேசி வந்ததாலேயே மக்கள் மத்தியில் உண்மையை உணர்த்துவதற்காகவே வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக டிடிவி. தினகரன் தரப்பை சேர்ந்த சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மருத்துவமனை படுக்கையில் ஜூஸ் அருந்துவது போன்ற வீடியோ ஒன்று டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் இன்று வெளியிட்டார். நாளை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் இன்று, இந்த வீடியோ வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வீடியோ வெளியிடப்பட்டது குறித்து தினகரன் ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறும்போது, ஓராண்டுக்கு முன்னரே இந்த வீடியோவை வெளியிட்டிருந்தாலும், இதே சர்ச்சைதான் எழுந்திருக்கும் என்றார். சசிகலா பற்றி பலரும் அவதூறாக பேசியபோதே இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்டோம். ஆனால் அவர் மறுத்து விட்டார். யாரிடமும் ஜெயலலிதாவை, இந்த கோலத்தில் காட்ட விரும்பவில்லை என்று சசிகலா
கூறியிருந்தார்.
தெளிவை கொடுக்கவுமே இந்த வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் பேசிய அவர், இந்த வீடியோ உண்மையான வீடியோ... இதை நாங்கள் நீதிமன்றத்திலும் கொடுப்போம். சிபிஐ விசாரணை வைத்தால் கூட எங்களுக்கு சவுகரியமாகத்தான் இருக்கும் என்றும் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.