இலவச மின்சாரம் கட் கிடையாது... கணக்கு தெரியாத காங்கிரஸ்.. பொய் பிரச்சாரம்.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.!!

Published : Jun 07, 2020, 11:57 PM IST
இலவச மின்சாரம்  கட் கிடையாது... கணக்கு தெரியாத காங்கிரஸ்.. பொய் பிரச்சாரம்.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு.!!

சுருக்கம்

விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது. 

திருப்பூரில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காங்கயம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற பிறகு பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்... "விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்வதாக எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாகவும் அது போன்ற ஒரு திட்டம் மத்திய அரசிடம் இல்லை. இலவச மின்சாரம் திட்டம் மூலமாகவே தமிழகத்தில் 21 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு எவ்வளவு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது என்ற விவரத்தை மட்டுமே மத்திய அரசு கேட்டுள்ளது. மின் வாரியத்தில் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதனை சரிசெய்ய என்ன திட்டம் உள்ளது என்பது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


காங்கிரஸ் கட்சி... "விவசாயிகளிடம் இலவச மின்சாரத்தை மத்திய அரசு ரத்து செய்யபோவதாக பொய் பிரச்சாரத்தை மேற்க்கொண்டு வருகிறது". மத்திய அரசு மாநில அரசிடம் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரத்தின் அளவுகளை கணக்கு கேட்டிருக்கிறது அவ்வளவு தான். இதற்காக கொடி பிடித்து வருவது விவசாயிகளை ஏமாற்றுவதாகும்.

 இந்த அரசு விவசாயிகளின் அரசாகவே இருந்து வருகிறது. பிரதமர் மோடியின் "சுயசார்பு பாரதம்" என்ற திட்டம் குறித்து வீடு வீடாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அதற்காக காணொளி வாயிலாக மின்னனு பேரணிகளையும் நடத்த இருப்பதாக தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

தேசியத் தலைவராக நிதின் நபின் நியமிக்கப்பட்டது ஏன்..? பாஜகவின் எதிர்காலத்திற்கான பலே திட்டம்..!
இனி நாடே விசில் போடும்.. மக்கள் சின்னம் விசில்.. வெற்றி ஆரம்பம்.. தளபதி விஜய் ஹேப்பி.. தவெக குஷி!