தமிழக அரசில் ஊழலே கிடையாது... எடப்பாடியார் அரசுக்கு பாஜக சர்டிபிகேட்..!

Published : Dec 24, 2020, 08:43 PM IST
தமிழக அரசில் ஊழலே கிடையாது... எடப்பாடியார் அரசுக்கு பாஜக சர்டிபிகேட்..!

சுருக்கம்

மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பிரதமர் மோடி, 6 மாநில விவசாய சங்கத்தினருடன் காணொலி காட்சி மூலம் நாளை பேச உள்ளார். தமிழகத்தில் செங்கல்பட்டு, பூம்புகார் உள்பட 4 இடங்களில் பிரதமர் பேசுவது ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரும் பங்கேற்க உள்ளார். பிரதமரை அவதூறாகப் பேசிய பேராயர் எஸ்றா சற்குணம் மீது தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழக அரசு மீது திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி உள்ளது. அதுகுறித்து தமிழக ஆளுநர்தான் முடிவு செய்ய முடியும். என்னை பொறுத்தவரை தமிழக அரசில் ஊழல் இல்லை என்பதே உண்மை. மு.க.அழகிரி பாஜகவுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம். பாஜக தரப்பில் நாங்கள் யாரும் அவரிடம் பேசவில்லை.” என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
தவெக-வில் நடிகர் கவுண்டமணி..? ஐயோ ராமா... விஜய்க்காக இந்த முடிவை எடுத்தாரா..?